22. November 2008 10:07
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
15. October 2008 12:52
27. August 2008 15:01
3. October 2008 18:45
12. October 2008 00:13
4. October 2008 12:47
சுவிற்சர்லாந்தில் இறைச்சிப்பாவனை அதிகரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
தர்சிகா   
30. April 2008 23:07
fleisch.jpgசுவிற்சர்லாந்தில் கடந்த ஆண்டு இறைச்சியின் நுகர்வு அதிகரித்திருப்பதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில்  465 000 தொன் இறைச்சி விற்பனை செய்யபட்டதாகவும் இதற்கு முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு இறைச்சி விற்பனை இரண்டு வீதத்தால்  அதிகரித்து ஒருவருக்கான இறைச்சி நுகர்வு 60.24 கிலோவாக இருந்ததாக  சுவிஸ் இறைச்சி உற்பத்தியாளர் சங்கம் (Schweizer Fleisch-Fachverband) (SFF) தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் சுவிற்சர்லாந்தில் சனத்தொகளை 70000 பேரினால் அதிகரித்தது.  இதன் பிரகாரம் ஒருவருகான இறைச்சிப் பாவனை 1.2 வீதம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கோழி இறைச்சிப் பாவனை 16.3 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஒருவருக்கான கோழி இறைச்சிப்பாவனை 9.6 கிலோவில் உள்ளது.

இதற்கு முன்னைய ஆண்டுகளில் அதிகமாக விற்பனையான மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி விற்பனை 2007 ம் ஆண்டில் அதிகரிக்கவில்லை என்று புள்ளிவிபங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டில் தயாராகும் இறைச்சியின் தொகை உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய போதாது என்ற விடயம் அவதானிக்கப்படவேண்டியதாக உள்ளது. மாட்டிறைச்சியை பொறுத்தவரை உள்நாட்டு  பாவனையின் 87 வீதமும், பன்றியிறைச்சியில் 95 வீதமும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது.

SFF  இன் தகவலின்படி வருட ஆரம்பத்தில் இறைச்சி விற்பனை ஒவ்வொரு ஆண்டும் குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டு ஆரம்பத்தில் மிகக் குறைந்தளவு இறைச்சியே விற்பனை செய்யபட்டதாக இறைச்சி விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். இதற்கு காரணமாக கடந்த ஆண்டு ஈரலிப்பான, குளிரான காலநிலையுடனான இளவேனிற்காலம் நீண்ட காலம் நீடித்திருந்ததாகும். இதனால் இறைச்சி வாட்டும் காலம் (Grill season) தாமதிததது.  நல்ல காலநிலை ஏற்பட்டிருந்தால் இறைச்சி விற்பனை அதிகரித்திருக்கும். அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பியக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளாலும் இறைச்சி விற்பனை அதிகரிக்கலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.  
 
< முந்தைய   அடுத்த >