| உலக உருண்டையில் கொசொவோ தனிநாடாகிவிட்டது. தமிழீழம் தனிநாடாகும் காலம் கனிந்துள்ளது. |
|
|
| சிறப்பு சுவிஸ்நிருபர் | |
| 1. May 2008 17:06 | |
|
தமிழீழ மக்களை கண்ணீர் சிந்த வைப்பது, சமாதானம் பேசிக்கொண்டே போராட்டத்தை கருவழிப்பது, தமிழீழ பெண்களை கொடுமைப்படுத்துவது, தமிழரின் வாழ்வாதாரத்தை பிடுங்கி எடுப்பதற்கு தொழிலாளர்களின் உரிமையை மறுப்பதென சிங்கள பேரினவாத அரசு தமிழரை நாளாந்தம் கொடுமைப்படுத்துவதனை சிறப்பாக வெளிபடுத்தியது ஊர்தி பவனி.
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் நம்பிக்கையை கவனத்தில் எடுத்து வெளிப்படுத்திய கருத்தும் தமிழீழ மக்களை மட்டுமல்லாமல் உலகையும் கவன ஈர்ப்பு செய்யும்படியானதாக காணப்பட்டது. வேற்று நாட்டின் பிடிக்குளென முட்டைக் கோதுக்குள் சிறைப்பட்ட கொசொவோ தனி நாடென்ற குஞ்சாகி உலகென்ற கோழியின் அரவணைப்புடன் சுதந்திரக் காற்றை சுவாசிக்க தொடங்கி விட்டது. சிங்கள தேசம் என்ற முட்டைக்கோதை பிளந்து தமிழீழம் என்ற குஞ்சு பிறப்பெடுக்கும் போது உலகென்ற கோழி அரவணைக்கும். |
| < முந்தைய | அடுத்த > |
|---|






