22. November 2008 09:40
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
19. August 2008 23:28
15. October 2008 12:52
27. August 2008 15:01
4. October 2008 12:47
11. October 2008 23:48
தமிழ் மக்களின் பாதுகாப்பு படை விடுதலைப்புலிகளே – சூரிச் மேதினத்தில் மக்கள் முழக்கம்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
முரசம் நிருபர்   
1. May 2008 17:53
mayday004.JPGசுவிற்சர்லாந்தில் அனைத்துலக தொழிலாளர் நாள் பேரணி இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகளில் சுவிஸ்கிளையினரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். (படங்கள் இணைப்பு)

சுவிற்சர்லாந்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரிடையே உள்ள  பதினைத்துக்கும் அதிகமான பொது அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்தப்பேரணியில் கலந்து கொண்டனர்.

001swiss may day.JPG

09swiss may day.JPG

சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் குலம் தலைமையில் இன்று 01.05.2008 காலை 10.30 அளவில் சூரிச் நகரில் பெரிய தபால் நிலையம் முன்பிலிருந்து ஆரம்பமாகிய இப்பேரணியில் சிங்களப்பேரினவாதிகளில் கோர முகத்தை சித்தரிக்கும் உருவம் தாங்கிய ஊர்தி பலரையும் கவர்ந்தது. தமிழீழத் தேசியத்தலைவரின் உருவப்படங்களுடன் தமிழீழ தேசியக்கொடியையும் தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்ட மக்கள் அவர்களின் விருப்பத்தை குரல் கொடுத்தது வெளிப்படுத்தினர்.
  • எங்களுக்கு தேவை தமிழீழம்
  • தமிழீழ மக்களின் தாகம் தமிழீழத் தாயகம்
  • தமிழீழ தேசியத்தின் பாதுகாப்பு படை தமிழீழ விடுதலைப்புலிகள்

18swiss may day.JPG

28swiss may day.JPG

என்ற கோசங்கள் பேரணி நிறைவடையும் வரை ஒலித்தது. இளையோர் அமைப்பினால் ஜேர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட தொழிலாளர் நாள் அறிக்கையும் சுவிஸ் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் ஊர்தியில் ஒலிபெருக்கி மூலமாக தமிழீழ தேசத்து மக்களின் துயர்,விருப்பு என்பன பற்றியும் ஜேர்மன் மொழியில் தெளிவுபடுத்தப்பட்டது.  ஆரம்பத்தில் மழை வந்தபோதிலும் பேரணியில் கலந்து கொண்டவர்களின் உற்சாகம் குன்றிவிடவில்லை.

48swiss may day.JPG

(மேலதிக படங்கள்)

பெருமளவானவர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டார்கள். கடந்த ஆண்டிலும் பார்க்க இம்முறை மிக்கூடுதலான மக்கள் கலந்து கொண்டனர்.  சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் வரை நகர்ந்த பேரணி பெல்வி (Bellevue) பகுதியில் நிறைவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ்கிளையின் பேச்சாளர் திரு அல்பேட்டின் உரையுடன் ஊர்வலம் நிறைவு பெற்றது.
 
< முந்தைய   அடுத்த >