20. November 2008 15:38
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
19. August 2008 23:28
13. October 2008 13:01
15. October 2008 12:52
21. August 2008 23:30
4. October 2008 12:47
சுவிற்சர்லாந்தில் மீண்டும் வெள்ளபெருக்கா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
1. May 2008 23:17
flood.jpgசுவிற்சர்லாந்தின் அல்ப்ஸ் மலைப்பிரதேசங்களில் பெருமளவிலான பனிக்கட்டி காணப்படும் அதேவேளை ஏபரல் மாதம் முழுவதும் பெய்த கடுமையான மழைவீழ்ச்சியானது மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாடு மூன்று பெரும் வெள்ளப்பெருக்கை சந்தித்துள்ளது. தற்போது வெள்ளப்பெருக்கை எதிர்நோக்கும் தயாரிப்பு வேலைகள் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும் மேலும் வளர்ச்சிநிலை அவசியமாக உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அல்ப்ஸ் மலையின் வடபிரதேசங்களில் கடந்த ஏப்ரல் 21/22 ம் திகதிகளில் 80 ஒரு சதுர மீற்றருக்கு 80 லீற்றர் அளவான மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

காற்றில் தாழ் அமுக்க நிலை நிலவுமிடத்து மலைப்பிரதேசங்களில் காணப்படும் பெருமளவிலான  பனிக்கட்டிகள் உடனடியாக கரையத் தொடங்காது.  இது வெள்ளப்பெருக்கு அபாயத்தை குறைக்கும். ஏப்ரல் மாதக்கடைசியில் எடுக்கபட்ட அளவீடுகளின்படி அல்ப்ஸின் வட பிரதேங்களில் உள்ள பனிக்கட்டிகளது ஆழம் இரண்டு மீற்றருக்கும் நான்கு மீற்றருக்கும் இடையில் உள்ளது. இது 1936 ம் ஆண்டிற்கு பின்பான நான்காவது உயர் அளவிலான ஆழம் ஆகும்.

மே மாதத்தில் சற்றே உயர் அளவிலான வெப்பநிலையுடன் மழைவீழ்ச்சியும் இருக்கும் என்று தேசிய காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. வெப்பமும் தண்ணீரும் மலைபகுதிகளில் உள்ள பனிக்கட்டிகளில் சேருவது அவற்றை கரைக்கும் சக்தியை அல்லது வல்லமையை அதிகரிக்கும். இதனால் மலைப்பகுதிகளில் இருந்து பாயும் பெருளவிலான தண்ணீர் நிலையானது வெள்ளப்பெருக்கு அபாயத்தை அதிகரிக்கின்றது.

2500 - 2800  மீற்றர் உயரங்களுக்கிடையில் கடுமையான மழைவீழ்ச்சி ஏற்படுமிடத்து அது மிகவும் அபாயகரமரமானதாகும் என பனிச்சரிவு தொடர்பான ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த திரு.கிறிஸ்ரின் பீல்மையர் தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சுவிற்சர்லாந்தில் இவ்வாறான இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னேட்பாட்டு தயாரிப்பு வேலைகள் மிகவும் சிறந்த நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
< முந்தைய   அடுத்த >