| சுவிட்ஸர்லாந்தின் பிரபல வேதியியல் நிபுணர் மரணம் |
|
|
| வா.கி.குமார் | |
| 2. May 2008 20:59 | |
|
1938 ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்திலுள்ள தனது ஆராய்ச்சிக்கூடத்தில் பயிர்களின் பூஞ்சைக் காளானிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு பொருளாக எல்.எஸ்.டி.யை அவர் உருவாக்கினார். இவ்வாறு உருவாக்கப்பட்ட எல்.எஸ்.டி. விழுங்கியவர்களுக்கு "சில உணர்ச்சிகளை அனுபவிக்கும் ஒரு நிலையை" ஏற்படுத்தும் என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. மன நோய்க்கான ஒரு மருந்தாகவும் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்று கண்டறியும் விதமாகவும் எல்.எஸ்.டி.யை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம் என அவர் எண்ணினாலும் 1960 களில் அது பொழுதுபோக்குக்கான ஒரு போதைப் பொருளாக பயன்படுத்தப்பட தொடங்கியது. இதையடுத்து, பல நாடுகள் அந்த மருந்தின் உபயோகத்தை சட்டவிரோதம் என அறிவித்தன. |
| < முந்தைய | அடுத்த > |
|---|





