| நடுவீதியில் இரட்டைக்கொலை |
|
|
| ரி.என்.ஜே | |
| 4. May 2008 11:47 | |
|
சுவிற்சர்லாந்தின் வடகிழக்குப்பகுதி மாநிலமான சென்ற் காலன் மாநிலத்தில் உள்ள வில் என்ற கிராமத்தில் நடுவீதியில் இருவர் சுட்டுக்கொல்லபட்டுள்ளனர். கொசோவோவைச் சேர்ந்த 52 வயதான நபரும் அவரின் 19 வயதான மகனுமே சுட்டுக்கொல்லபட்டவர்களாகும். நேற்று 03.05.2008 18.00 மணிக்கு சற்று பின்னர் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பேர்ன் மாநில வாகன இலக்கமுடைய பச்சை நிற Ford Fiesta வாகனத்தில் வந்தவர்களே இத்தாக்குலைச் செய்ததாக தெரிவிக்கபட்டுள்ளது. இச்சம்பவத்தை சென்ற் காலன் கன்ரோன் காவற்துறையினர் உறுதிபடுத்தினர். கொலை செய்யப்பட்ட தகப்பனும் மகனும் அப்பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்றும் உடனடியாக அவர்களுக்கு உதவு புரிய முடியாதபடி போய்விட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர். கொலைக்கான மனஉந்துதல் (motiv) என்ன என்பது இதுவரை தெரியவில்லை என தெரிவித்திருக்கும் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை செய்து வருவதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி குறிப்பிட அயலவர் ஒருவர் தான் இரவு உணவு மேசையில் இருக்கும்போது வெடிச்சத்தம் கேட்டு தான் உடனடியாக ஜன்னல் வழியால் எட்டிபாத்தபோது இருவர் நடுவீதியில் வீழ்ந்து கிடந்ததாக தெரிவித்தார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் பின்புறகதவு திறந்தபடி மெர்சேடஸ் பென்ஸ் கார் ஒன்றும் நின்றதாக வேறொரு அயலவர் தெரிவித்தார். BE 617 657 இலக்க வாகனம் தேடப்படுகிறது தப்பியோடிய வாகனமாக கருதப்படும் BE 617 657 இலக்கமுடைய Ford Fiesta வாகனம் காவற்துறையினரால் தேடப்பட்டு வருகிறது. இவ்வாகனத்தை கண்டவர்கள் அல்லது இவ்வாகனம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் காவற்துறையினருக்கு அறிவிக்குமாறு கேட்டுகொள்ளபட்டுள்ளனர். சாட்சிகள் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அவ்விடத்தில் நின்றவர்கள் சம்பவத்தை நேரிற்பார்த்தவர்கள் சாட்சி சொல்ல விரும்பினால் காவற்துறையினருடன் தொடர்பு கொள்ளமாறு சென்ற் காலன் மாநில காவற்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.இறுதியாக கிடைத்த தகவல் - கொலையாளிகள் நால்வர் கைது செய்யபட்டனர் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை கைது செய்யப்பட்டிருப்பதாக இறுதியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை இரவு மூவர் கைது செய்யபட்டனர். நான்காவது நபர் ஞாயிறு காலை தானாக காவற்துறையிடம் சரண்டைந்ததார். அவர்களால் பயன்படுத்தப்பட்ட வாகனமும் காவற்துறையினரால் கைப்பற்றப்பபட்டது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






