|
யூ.பி.எஸ் வங்கி தொழிற்குறைப்பு |
|
|
|
ரி.என்.ஜே
|
|
6. May 2008 22:13 |
சுவிற்சர்லாந்தில் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான UBS (Union Bank of Switzerland) அடுத்த வருட நடுப்பகுதில் தனது தொழிலாளர்களில் 5500 பேரை குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இவ்வங்கியானது அமெரிக்க அடைமானக்கடன் (mortgage crisis) பிரச்சனையால் மிகவும் ஐரோப்பாவிலேயே மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட வங்கியாகும். முதலாவது காலாண்டின் இழப்பீடு 11.53 பில்லியன் பிராங் என்று வங்கியின் நிதிநிலை அறிக்கை தெரிவிக்கின்றது. இருப்பினும் வங்கியின் முன்னைய கணிப்பீட்டின் பிரகாரம் 12 பில்லியன் இழப்பீடு எதிர்வு கூறப்பட்டிருந்தது.
மேலும் வங்கியின் சொத்து முகாமைத்துவ வர்த்தகத்தின் மூலம் 5.6 பில்லியன் பிராங் வருமானம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரொயிற்றர் நிறுவனத்தினால் நடத்தபட்ட கருத்துக்கணிப்பில் ஆய்வாளர்கள் பலர் 9 பில்லியன் வருமானமும் 11.9 தேறிய நட்டமும் இக்குறிக்கபட்ட காலாண்டில் அடையபடும் என்று கூறியிருந்தனர்.
|