| சுவிற்சர்லாந்தின் தேசிய வீர்ர் வில்ஹைம் ரெல்லின் வரலாறு ஹொலிவூட் திரைப்படமாகிறது |
|
|
| ஆக்கம்: ரி.என்.ஜே | |||||||||
| 9. மே 2008 20:15 | |||||||||
சுவிற்சர்லாந்தின் வரலாற்று நாயகனான “வில்ஹைம் ரெல்” (Willhelm Tell) இன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட ஹொலிவூட் திரைப்படம் விரைவில் தயாராகவுள்ளது.. The Adventures of William Tell என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் 60 மில்லியன் சுவிஸ் பிராங் செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்படவுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 2010 ல் திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படம் சுவிற்சர்லாந்தின் வரலாற்றை உலக அளவில் பேசவைக்கவுள்ளது.ஹொலிவூட் திரைப்பட தயாரிப்பாளரான பி்ஃரெட் காறுசோ Fred Caruso தயாரிக்கும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக திகழ்ந்த சார்லி சாப்லினின் பேத்தியான கீரா சாப்லின் நடிக்கவுள்ளார் வில்ஹைம் ரெல்லின் மனைவியின் வேடமேற்று நடிக்கவிருக்கும் 25 வயதான இவர் சிறுவயதிலிருந்து சுவிற்சர்லாந்தில் வளர்ந்தவர். ஏற்கனவே "The Importance of Being Ernest" . என்ற திரைப்படத்தில் நடித்துள்ள கீரா சாப்லின் மோடல் நடிகையும் தயாரிப்பாளரும் ஆவார். பல மில்லியன் சொத்துகளுக்கு அதிபதியான இவர் இப்படத்தில் நடிப்பது குறித்து கேட்டபோது சுவிற்சர்லாந்தின் உன்னதமான போராளியின் வாழ்க்கை குறித்து தயாரிக்கபடும் இப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.
வில்ஹைம் ரெல்லின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த மத்திய சுவிற்சர்லாந்தின் ஊரி, லுசேர்ன் ஆகிய இடங்களில்இப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்புகளை மேற்கொள்ள இயக்குனர் பி்ஃரெட் காறூசோ விரும்புவதாக தெரிவித்தார். வில்ஹைம் ரெல் வாழ்ந்த காலப்பகுதியின் பழமை வாய்ந்த பல நகர அமைப்புகள் பெரும் பணச்செலவில் உருவாக்கப்படவுள்ளன. வில்ஹெம் ரெல்லின் திகிலூட்டும் சம்பவங்களை காண்பிக்கபோகும் இப்படமானது ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தவிருக்கிறது சுவிற்சர்லாந்தின் தேசிய வீரராக மதிக்கப்படும் “வில்ஹைம் ரெல்” 13. ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் 14 ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலும் வாழ்ந்த விடுதலை போராளியாவார். கொடுங்கோல் மன்னனுக்கு தலைவணங்க மறுத்த காரணத்திற்காக இவர் கைது செய்யப்பட்டு தண்டனையாக தனது மகனின் தலையில் அப்பிள் பழத்தை வைத்து அதன்மீது மீது அம்பு எய்து அப்பிள் பழத்தை வீழ்த்த வேண்டும் என்ற தண்டனை வழங்கப்பட்டார். தமது நாட்டின் தேசிய வீரனின் வரலாறு திரைப்படமாக்கப்படுவது சுவிஸ் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|||||||||
| < முந்தைய | அடுத்த > |
|---|



சுவிற்சர்லாந்தின் வரலாற்று நாயகனான 





