20. August 2008 20:30
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
16. August 2008 15:10
2. August 2008 23:48
27. July 2008 09:43
14. August 2008 16:37
8. August 2008 18:51
அகதிகளென்ற போர்வையில் போராளிகள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை - கருணாநிதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
10. May 2008 22:29
karunanidhi.jpgஇலங்கையில் மோதல்கள் அதிகரித்திருப்பதால் அகதிகளென்ற போர்வையில் போராளிகள் தமிழகத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்திருப்பதாக முதலமைச்சர் மு.கருணாநிதி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

பொலிஸார், காவல் பிரிவினர், தீயணைக்கும்படைப் பிரிவினருக்கான மானியம் வழங்கும் சட்டமூலப் பிரேரணை மீது நேற்று தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றுகையிலேயே கருணாநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.

கடத்தல்காரர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெடிமருந்துகள், இரும்புக்குண்டுகள், மருந்துகள் மற்றும் பொருட்களை இலங்கைக்குக் கடத்த முயற்சிப்போருக்கு எதிராகத் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தியிருப்பதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்டதாக இந்த வருடத்தின் முதல் 3 மாதகாலப்பகுதியில் 15 இலங்கைத் தமிழர்கள் உட்பட 36 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டபின் 21 ஆயிரம் பேர் அகதிகளாகத் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

 73,087 இலங்கைத் தமிழர்கள் மாநிலத்தின் 25 மாவட்டங்களில் 177 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 
< முந்தைய   அடுத்த >