| திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி |
|
|
| வா.கி.குமார் | |
| 11. May 2008 09:00 | |
|
நடைபெற்று முடிவடைந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றிருப்பதுடன்,திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இதுவரை கிடைக்கப்பெற்ற முடிவுகளுக்கமைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 89 வீதமான வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதுடன், 11 வீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 59 வீதமான வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 70,758 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை வெற்றிபெற்றிருப்பதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 59,298 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை வென்றிருப்பதுடன், மக்கள் விடுதலை முன்னணி 4,266 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் வென்றுள்ளது. இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 330,950 வாக்குகளில் 202,443 வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன.இதில் 21,088 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 242,463 வாக்குகள் இவற்றில் 150,624 வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன.இவற்றில் 12,624 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அம்பாறை மாவட்டத்துக்கான முழுமையான முடிவுகள் வெளியாகவில்லை.இருந்தபோதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 21 ஆசனங்களுக்கான இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 9 ஆசனங்களையும், தமிழ் ஐனநாயகத் தேசியக் கூட்டமைப்பு 1 ஆசனத்தையும், மக்கள் விடுதலை முன்னணி 1 ஆசனத்தையும் வென்றுள்ளது. அம்பாறை தேர்தல் முடிவுகளைக் கொண்டே கிழக்கு மாகாணசபையில் யார் வெற்றிபெற்றார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியுமென தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் கூறுகின்றன.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|










