|
இரண்டாம் சுற்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்- சிம்பாபே எதிர்க்கட்சித் தலைவர் |
|
|
|
ஆக்கம்: வா.கி.குமார்
|
|
11. மே 2008 11:43 |
சிம்பாபே ஜனாதிபதி ராபர்ட் முகாபேயை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்றில் போட்டியிடத் தயாராக இருப்பதாக அந்தநாட்டின் எதிரக்கட்சித் தலைணர் மோர்கன் சாங்கிராய் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் சுற்று தேர்தலை நடத்துவதற்குரிய அவசியமில்லையெனவும், கடந்த மார்ச் மாதம் நடந்த முதல் சுற்று வாக்குப்பதிவிலேயே தான் தெளிவான வெற்றியைப் பெற்றுவிட்டதாகவும் சாங்கிராய் இதற்கு முன்பு தெரிவித்திருந்தார்.
எனினும், இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது சுற்று ஜனாதிபதித் தேர்தல நடத்தப்பட வேண்டுமென்பதுடன், சர்வதேச கண்காணிப்பாளர்கள் முழுமையாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென தென்னாபிரிக்காவில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது சாங்கிராய் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமைதிகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சர்வதேச துருப்புகள் அரசியல் வன்முறை நடைபெறுவதைத் தடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதவேளை, முன்நிபந்தனைகள் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்திருக்கும் ஆளும்கட்சியான ஜானு பி.எஃப் கட்சியைச் சேர்ந்த நீதித்துறை அமைச்சர் பேட்ரிக் சினமஸா, சிம்பாப்வேயின் அரசியல் சாசனம் மற்றும் தேர்தல் சட்டங்களுக்கு அமைய இரண்டாம் சுற்று தேர்தல் நடத்தப்படுமெனவும் கூறியுள்ளார்.
|