20. ஜூலை 2008 10:51
 
 
கிழக்கு தேர்தலில் பல மோசடிகளை மேற்கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிவாகை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
11. மே 2008 12:07

கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பல மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டு 20 ஆசனங்களை பெற்று வெற்றிவாகைசூடியுள்ளது.

நேற்று சனிக்கிழமை ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கையை கிழக்கு மாகாணத்தில் உள்ள அனேமான தமிழ் பிரதேசங்களில் தமிழர்கள் புறக்கணித்திருந்தபோதும் அப்பகுதிகளில் ஆயுதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான கள்ள வாக்கு அளிக்கும் செயற்பாடுகாரணமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிவாகைசூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 308,886 வாக்குகளை பெற்று 20ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 250,732 வாக்குகளை பெற்று 15 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 9390 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் தமிழ் ஜனநாயக கூட்டமைப்பு 7714 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி.யினர் இத்தேர்தலில் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றமுடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

இத்தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வாக்காளர்களில் அரைவாசி வாக்காளர்கள் இத்தேர்தலை புறக்கணித்துள்ளனர்.இதன்படி கிழக்கு மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட 900,000 வாக்காளர்களில் 400,000வாக்காளர்கள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 150,000 வாக்காளர்களும் அம்பாறை மாவட்டத்தில் 150,000 வாக்காளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 100,000 வாக்காளர்களும் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் பிள்ளையான்குழுவினர் மேற்கொண்ட கடும் கள்ளவாக்கு அளிப்பு செயற்பாடுகாரணமாகவே அப்பகுதியில் தமது கட்சி தோல்விகொண்டதாகவும் ஆனால் பெருமளவான மக்கள் ஐ.தே.கட்சிக்கே வாக்களித்ததாகவும் அக்கட்சின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

 
< முந்தைய   அடுத்த >