20. ஜூலை 2008 10:52
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
16. ஜூன் 2008 00:19
23. ஜூன் 2008 21:38
5. ஜூலை 2008 08:54
5. ஜூலை 2008 06:59
7. ஜூலை 2008 19:41
முப்படையினையும் வைத்திருக்கின்ற எதிரிக்கு பேரிடியான அடி திருமலை கப்பல் தகர்ப்பு - இளந்திரை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
11. மே 2008 19:53
ilanthirayan001.jpgஎதிரிப்படையினை ஒன்றாக குவித்து முப்படையினையும் வைத்திருக்கின்ற எதிரிக்கு பேரிடியாக கொடுக்கப்பட்ட அடியாகத்தான் திருகோணமலையில் கப்பல் தகர்ப்பு அமைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை கிளிநொச்சி அக்கராயன்குளத்தில் இடம்பெற்ற வீரமுரசு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வானது வன்னேரிக்குளம் சிறப்பு வேலைத்திட்டப்பொறுப்பாளர் சு.ஜகன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய தமிழீழ விடுதலைப்புலிகளி;ன் இராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன்,

"கொடுங்கோண்மை சிறிலங்கா அரசை எதிர்த்து நிற்பதற்கான வலிமையான மனங்களைக் கொண்டவர்களாக துன்பத்தின் பிடியில் இருக்கின்ற போதும், விடுதலைக்கு உயரிய பங்களிப்பைச் செய்யும் மக்களாக நீங்கள் காணப்படுகின்றீர்கள்.

தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாற்று நாளாக இன்றைய நாளில் நாம் கூடி நிற்கின்றோம்.

ஆறு வருடங்களுக்கு முன்பு அக்கராயன் மண்ணில் எமது வீரத்தளபதிகளில் ஒருவரான கங்கை அமரன் தாய் மண்ணுக்காக உயிரைக் கொடுத்தார்.

அதே வீரப்புதல்வனின் பெயரில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட நீரடி நீச்சல் பிரிவு, எதிரியின் மிகப்பலமான கோட்டையான திருகோணமலைத் துறைமுகத்தில் பலமான தாக்குதலை நடத்தி படைக்கல விநியோகக் கப்பலை மூழ்கடித்துள்ளது.

அன்று தலைகுனிந்த தமிழினத்தை தலைநிமிர வைத்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் காலத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எதிரிப்படையினை ஒன்றாகக் குவித்து முப்படையையும் வைத்திருக்கின்ற திருகோணமலையில் எதிரிக்குப் பேரிடியாக கொடுக்கப்பட்ட அடியாகத்தான் கப்பல் தகர்ப்பு அமைந்துள்ளது என்றார் அவர். "

நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடரினை படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் ஏற்றினார்.

2 ஆம் லெப். கலையமுதனின் திருவுருவப் படத்திற்கு தாயார் சுடர் ஏற்றி மலர்மாலை சூட்டினார்.

2 ஆம் லெப். தேனலையின் திருவுருவப் படத்திற்கு உடன்பிறப்பு சுடர் ஏற்றி மலர்மாலை சூட்டினார்.

தமிழீழத் தேசியத் துணைப்படை வீரர் உதயகுமாரின் திருவுருவப் படத்திற்கு துணைவியார் சுடர் ஏற்றி மலர் மாலை சூட்டினார்.

சிறப்புரையினை இராசையா இளந்திரையன் நிகழ்த்தினார்.

தமிழீழ நிர்வாக சேவையின் "செந்தமிழ்" இசைக்கலைஞர்களின் இசை நிகழ்வு, பொன்னாலையூர் கண்ணதாசனின் "பொய்முகம்" நாடகம் ஆகியன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.

 
< முந்தைய   அடுத்த >