20. ஜூலை 2008 10:54
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
23. ஜூன் 2008 21:38
26. ஜூன் 2008 06:38
7. ஜூலை 2008 19:41
16. ஜூன் 2008 00:19
28. ஜூன் 2008 23:53
விலைவாசி: 'மத்திய அரசை கண்டித்து போராட்டம்' - ஜெ. அறிவிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
11. மே 2008 20:47

jayalalitha11.jpgவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறினால் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் அதிமுக போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உணவுப் பொருள் பதுக்கல் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. சூதாட்டம் போல் நடைபெற்று வரும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யவேண்டும்.

விவசாயிகளுக்கு உரிய மானியம் வழங்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் அவர்கள் விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர். விவசாயத்தை ஊக்கப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினையை நாடு சந்திக்க நேரிடும்.

பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

பெட்ரோல் மற்றும் டீசல் வரி, சுங்க வரி, கலால் வரி ஆகியவற்றை குறைக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் மூலம் 15 நாட்களுக்குள் விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறினால் அதிமுக சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

 
< முந்தைய   அடுத்த >