20. ஜூலை 2008 10:56
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
16. ஜூன் 2008 00:19
5. ஜூலை 2008 06:59
26. ஜூன் 2008 06:38
7. ஜூலை 2008 19:41
30. ஜூன் 2008 18:50
இயக்குநர் சங்கத் தேர்தலில் மோதல்: வாக்குப்பதிவு ரத்து அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
11. மே 2008 21:05

film_star.jpgஇன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வடபழனியில் உள்ள கலை இயக்குநர்கள் சங்க அலுவலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரியாக ஆனந்த்மோகன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இயக்குநர் பாரதிராஜா, ஆர்.சி.சக்தி ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். 3}வது அணியாக இணை இயக்குநர்கள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் நேற்று இரவு ஆதரவு கேட்டு சிலர் பேனர் கட்டியதால் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. பேனர் கட்டியவர்கள் தாக்கப்பட்டனர்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று காலை இயக்குநர்கள் அனைவரும் வடபழனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கூடி அவசர ஆலோசனை நடத்தினர்.

இக்கூட்டத்தில் பாலச்சந்தர், ராம.நாராயணன், எஸ்.ஏ.சந்திரசேகரன், பாரதிராஜா மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ், பி.வாசு மற்றும் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.

வெளி ஆட்களை அழைத்துவந்து தாக்குதல் நடத்தியதாக இணை இயக்குநர்கள் மீது அக்கூட்டத்தில் சிலர் குற்றம்சாட்டிப் பேசினர்.

பின்னர் பாரதிராஜா, பாலச்சந்தர் தலைமையில் அனைத்து இயக்குநர்களும் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்துக்கு சென்றனர்.

அங்கு இயக்குநர்கள், இணை இயக்குநர்கள். உதவி இயக்குநர்கள் ஆகியோரை தேர்தல் அதிகாரி எதிரே அமரவைத்து சமரசம் செய்தார்.

எனினும் இருபிரிவினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டியதால் அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது.

மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்

 
< முந்தைய   அடுத்த >