20. ஜூலை 2008 10:58
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
28. ஜூன் 2008 15:18
5. ஜூலை 2008 08:54
16. ஜூன் 2008 00:19
16. ஜூன் 2008 00:09
7. ஜூலை 2008 19:41
உயிருள்ள வரை நேரு குடும்பத்துக்கு விசுவாசமாக இருப்பேன்: அர்ஜுன் சிங் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
11. மே 2008 21:26

உயிருள்ள வரை நேரு குடும்பத்தினருக்கு விசுவாசமாக இருப்பேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான அர்ஜுன் சிங் கூறினார்.

என்னைக் குறை கூறி விமர்சனம் செய்வது பொருத்தமற்றது - தேவையற்றது என்று அவர் கூறினார்.

இந்த விமர்சனங்களால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

நான் 1960-ல் பண்டிட் ஜவஹர்லால் நேருவை நான் சந்தித்தேன். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் முழுக்க முழுக்க விசுவாசமாக இருப்பது என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன்.

கடந்த 48 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இதை நான் தீவிரமாகக் கடைப்பிடித்து வருகிறேன். நேரு குடும்பத்தினருக்குத் தொடர்ந்து விசுவாசமாக இருக்கும் வகையிலேயே எனது செயல்பாடுகள் இருக்கும்.

என்னைப் பொருத்தவரை இது முடிந்துப்போன விஷயம். இதை மீண்டும் பேசுவதற்கு ஏதும் இல்லை என்று அர்ஜுன் சிங் அறிக்கையில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் முடிவெடுப்பதில் தற்போது தெளிவற்ற நிலை இருப்பதாக கடந்த 2 நாள்களுக்கு முன் அர்ஜுன் சிங் கூறியிருந்தார்.

பிரபல பத்திரிகையாளர் கன்கையாலால் நந்தன் தொகுத்துள்ள "மோகி காஹா விஷ்ரம்' என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பேட்டி ஒன்றில் அர்ஜுன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"முன்பெல்லாம் கட்சியில் முடிவெடுப்பதில் பல வாய்ப்புகள் இருந்தன. விரிவான விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதால் மக்கள் அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால் தற்போது முடிவெடுப்பதில் குழப்பமான நிலை கட்சியில் இருக்கிறது என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால் அர்ஜுன் சிங்கின் இந்த கருத்தை கட்சி மேலிடம் நிராகரித்துவிட்டது. கட்சி விவகாரங்களில் வெளிப்படையான விவாதம் நடத்தி முடிவு எடுக்கிறார் கட்சித் தலைவர் சோனியா காந்தி என்று செய்தித் தொடர்பாளர் சகில் அகமது பதில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அர்ஜுன் சிங் கருத்துக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் பலத்த எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்துக்கொண்டிக்கிறது.

மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அர்ஜுன் சிங்கின் கருத்து கட்சியை பலவீனப்படுத்துவதாக ஆகிவிடும் என்று மத்திய பிரதேச காங்கிரஸ் சுபாஷ் யாதவ் கூறியுள்ளார்.

பிரதமராக வேண்டும் என்பது அர்ஜுன் சிங்கின் நீண்ட நாள் ஆசை. ஆனால் அதற்கு இனி வாய்ப்பில்லை என்று தெரிந்ததால் தற்போது கட்சித் தலைமையை குறை கூறி வருகிறார் என்றார் சுபாஷ்.

ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என்று அண்மையில் அர்ஜுன் கூறி தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியதால் ஏற்கெனவே அவர் மீது அதிருப்தியில் இருந்தது கட்சி மேலிடம். தற்போது வெளிப்படையான விவாதம் இல்லை என்று கூறியிருப்பது கட்சி மேலிடத்தை மேலும் எரிச்சலடையச் செய்துள்ளது.

 
< முந்தைய   அடுத்த >