|
புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்- ஐ.தே.க |
|
|
|
ஆக்கம்: வா.கி.குமார்
|
|
12. மே 2008 10:18 |
புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாணசபையின் முழுப் பயன்பாட்டையும் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு அதிகாரப்பகிர்வு தொடர்பான இணக்கப்பாடு ஏற்படுத்தப்படுவது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் வென்றிருப்பதை வரவேற்றிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க, கிழக்கு மாகாணத்தில் தேசிய மாகாணசபையொன்று அமைக்கப்பட்டு, அதிகாரங்கள் பகிரப்படவேண்டுமெனக் கூறியுள்ளார். எ
னினும், முதல் முறையாக உருவாக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாணசபையை ஆளும் கட்சி கைப்பற்றியிருக்கும் முறை கவலையடைவதாக அவர் குறிப்பிட்டார்.
20 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாண மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தியுள்ளனர். கிழக்கு மாகாணசபையின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேசிய மாகாணசபையொன்று உருவாக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கி பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட வேண்டும். தற்பொழுது கிழக்கில் காணப்படும் சூழ்நிலையின் பயனை அனைத்து இன மக்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய எஸ்.பி.திஸ்ஸாநாயக்க கூறினார்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அரசாங்கம் வன்முறைகளில் ஈடுபட்டமை தொடர்பாக கடுமையாகச் சாடியிருந்த அவர், அரசாங்கச் சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டு, மக்கள் அச்சுறுத்தப்பட்டே அரசாங்கம் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பதாகத் தெரிவித்தார்.
|