|
திருகோணமலையில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு - இரு தமிழ் வேட்பாளர்களும் |
|
|
|
வா.கி.குமார்
|
|
12. May 2008 10:26 |
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அதிகூடிய விருப்பு வாக்குகளை மாவட்டத்தில் பெற்றுள்ளார்.
39,771 விருப்பு வாக்குகள் இவருக்குகிடைத்துள்ளன. ஐ.தே.க.வின் பட்டியலில் போட்டியிட்ட எம்.எஸ்.தௌபீக் 20,822 வாக்குகளையும் எம்.ஏ.எம்.மௌரூப் 14,041 வாக்குகளையும் ஏ.பரசுராமன் 13,266 வாக்குகளையும் ஆர்.என்.வரதன் 12,686 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட எம்.கே.ஏ.டி.குணவர்த்தன 22,392 வாக்குகளையும் ஹசன் மௌலவி 16,640 வாக்குகளையும் சூரியவதி கலப்பதி 11,219 வாக்குகளையும் முஹமட் பாயிஸ் 9,641 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
|