20. ஜூலை 2008 10:55
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
இணைய செய்திகள்
பதிவு புதினம் சங்கதி தமிழ்வின்info தமிழ்பிபிசி தமிழ் யாழ் இணையம்
முக்கிய ஆய்வு
28. ஜூன் 2008 23:53
23. ஜூன் 2008 21:38
16. ஜூன் 2008 00:09
5. ஜூலை 2008 06:59
26. ஜூன் 2008 06:38
இலங்கை செய்திகள்
முக்கிய செய்தி
20. ஜூலை 2008 07:41

இந்த மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு சுமார் 12,000 இற்கும் மேற்பட்ட பொலிசாரும், ஆயுதந்தாங்கிய படையினரும்...

20. ஜூலை 2008 06:56
60 ஆண்டுகளாக இலங்கையில் சிங்கள அரசுகள் தமிழர்கள் மீது மேற்கொண்டுவந்த இன ஒடுக்குமுறை தொடர்பான கண்காட்சி ஒன்று பிரித்தானியாவில் கடந்த புதன்கிழமை...
ஐபிசி இன்னிசைக்குரல் 2008 – சுவிஸ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: .   
12. மே 2008 10:29
08 - 1st.jpgஐபிசி தமிழ் ஐந்தாவது ஆண்டாக நடாத்தும் இன்னிசைக்குரல் 2008 பாடல் போட்டி நிகழ்வு 11.05.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் வாழ் வர்த்தகப் பெருந்தகைகளின் பேராதரவில் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிறீ அவர்கள் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. ஐபிசி தமிழ் சுவிஸ் கலையகம் வழங்கிய வரவேற்புரையைத் தொடர்ந்து கௌசல்யன் கலைக்கூட மாணவிகள் வழங்கிய வரவேற்பு நடனம் இடம்பெற்றது. படத்தொகுப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை கலை பண்பாட்டுக் கழக இசைக்குழுவினர் வழங்கிய இசையில் நடைபெற்ற இளம் இன்னிசைக்குரல் 2008, ஆண் இன்னிசைக்குரல் 2008, பெண் இன்னிசைக்குரல் 2008 போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன. மண்டபத்தில் திரண்டிருந்த மக்களின் இரசனையுடன் நடைபெற்ற பாடல் போட்டி நிகழ்வில் ஈழம் போய்ஸ் வழங்கிய மேற்கத்தேய நடனம், சிறப்புரை , பரதசேத்திரா நடனாலய மாணவிகளின் எழுச்சி நடனம், கனடாவில் இருந்து வருகை தந்த உளவளத்துறை பயிற்சியாளர் பிரான்சிஸ் சேவியர் அடிகளார் அவர்களின் உரை, கடந்த வருட இன்னிசைக்குரல் நிகழ்வில் பங்குபற்றி வெற்றி பெற்ற பாடகியின் கௌரவப்பாடல் என்பன இடம்பெற்றன.

இப்போட்டி நிகழ்வின் நடுவர்களாக மதுரக்குரலோன் கண்ணன், திருமதி சோபா கண்ணன் கலந்து கொண்டு நடுவர்களாகக் கலந்து கொண்டனர். 

20.jpg

இந்நிகழ்வில் இளம் இன்னிசைக்குரல் வரதராஜன் வைஸ்ணவியும் முத்துக்குமார் பிரவீனாவும் தெரிவாகி மதிப்பளிக்கப்பட்டனர். ஆண் இன்னிசைக்குரல் 2008 பாலகுமார் பாலசுப்பிரமணியம் , ஆண் இணை இன்னிசைக்குரல் 2008 சிவகுரு குரு, பெண் இன்னிசைக்குரல் 2008 தர்சினி திலீபன், பெண் இணை இன்னிசைக்குரல் 2008 றெசீனா யோகசிங்கம் ஆகியோர் தெரிவாகி மதிப்பளிக்கப்பட்டனர்.

45.jpg

பாடகர்களுக்கான நினைவுப்பரிசுகளை ஐபிசி தமிழோடு கரம் கோர்த்து நிறஇகும் வர்த்தகப் பெருந்தகைகள் வழங்க நடுவர்கள், கலைஞர்கள், உளவளத்துறை பயிற்சியாளர் பிரான்சிஸ் சேவியர் அடிகளார் ஆகியோருக்கான நினைவுப் பரிசில்களை ஐபிசி தமிழ் சுவிஸ் கலையகத்தினர் வழங்கி மதிப்பளித்தனர். தொடர்ந்து ஐபிசி தமிழ் சுவிஸ் கலையகம் வழங்கிய நன்றியுரை இடம்பெற்றது.

62 - 1st.jpg

இளம் இன்னிசைக்குரல் 2008 , ஆண் இன்னிசைக்குரல் 2008 , பெண் இன்னிசைக்குரல் 2008 ஆக தெரிவாகிய மூவரும் இவ்வருட இறுதியில் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய இன்னிசைக்குரல் நிகழ்வில் கலந்து போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக படங்கள்

 
< முந்தைய   அடுத்த >
உணவகத்தின் மீது மோதிய வாகனம் – 24 வயது இளம் யுவதி பலி
20. ஜூலை 2008 00:11
ரி.என்.ஜே
அதிவேகமாக தனது வாகனத்தை செலுத்திவந்த 24 வயதுப் யுவதி ஒருவர்  பாடன் நகர மத்தியில் உள்ள உணவகத்தின் மீது (Restaurant Paparazzi) மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியானார். பலியான இளம் யுவதி மேறபடி உணவத்ததில் வேலை செய்தவராவார். விபரம்
சமூக உதவி ஊழியர் பணத்தை கையாடினார்
16. ஜூலை 2008 09:44
ரி.என்.ஜே
பேர்ன் மாநிலத்தில் உள்ள றிகிஸ்பேர்க் என்னும் கிராமத்தில் சமூக உதவியாளர் ஒருவர் 234 000 பிராங் பணத்தை கையாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவற்துறையால் முழு அளவிலான விசாரணை மேற்கொள்ள்ளபட்டுள்ளது.   விபரம்
இலவச செய்தித்தாள்கள் குப்பைகளை வெளியேற்றும் செலவை பொறுப்பேற்க கோரிக்கை
16. ஜூலை 2008 09:10
ரி.என்.ஜே
gratiszeitungen_romandie_57769.jpgசுவிற்சர்லாந்தில் வெளியாகும் இலவச செய்தித்தாள்கள் தமது பத்திரிகைகளின் பழைய தாள்களை வெளியேற்றுவதற்கான செலவை பொறுப்பேற்க வேண்டும், என்று சுவிஸ் சுற்றுப்புற சூழல் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கபட்டுள்ளது. இப்பத்திரிகைகளால் அதிகளவான குப்பைகள் நகரப்பகுதியில் சேர்வதாக முறையிடப்பட்டுள்ளது.  விபரம்
மீனவர் மீதான தாக்குதலை தடுக்கவேண்டும்: இலங்கைத் தூதரிடம் இந்தியா கண்டிப்பு
20. ஜூலை 2008 06:36
வா.கி.குமார்

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க உடனடி நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என இலங்கைத் தூதரிடம் இந் திய வெளியுறவுத் துறை துணைச் செயலர் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டார்.

விபரம்
சோனியா விருந்து திடீர் ரத்து
20. ஜூலை 2008 06:23
வா.கி.குமார்

sonia.jpgஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை இரவு அளிப்பதாக இருந்த விருந்து நிகழ்ச்சி கடைசி நிமிஷத்தில் ரத்து செய்யப்பட்டது.

விபரம்
எம்.பி.க்களுக்கு ரூ.25 கோடி லஞ்சம் குற்றச்சாட்டை பரதன் நிரூபிக்க வேண்டும்: லாலு
20. ஜூலை 2008 06:09
வா.கி.குமார்

lalu.jpgநம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிப்பதற்காக எம்.பி.க்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ரூ.25 கோடி கொடுப்பதாக ஏ.பி.பரதன் கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

விபரம்
அடுத்த மாதம் பாகிஸ்தான் அரசை கலைக்க முஷரப் திட்டம்
20. ஜூலை 2008 07:29
வா.கி.குமார்

musharraf_Tamb.jpgபாகிஸ்தான் அரசை அடுத்த மாதம் கலைப்பதற்கு அதிபர் முஷரப் திட்டமிட்டு இருப்பதாக அதிபர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபரம்
போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஏ.பி.சி.யின் தெற்காசிய நிருபர் சிங்கப்பூரில் கைது
19. ஜூலை 2008 20:49
வா.கி.குமார்
arrast.jpgசிங்கப்பூரில் கைதான ஏ.பி.சி.யின் தெற்காசியாவுக்கான நிருபர் பீற்றர் லொய்ட் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளார். விபரம்
தீவிரவாதத்துக்கு எதிராக 40 லட்சம் கையெழுத்து
19. ஜூலை 2008 20:23
வா.கி.குமார்

pakistan.jpgபாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்கக் கோரும் மனுவில் நான்கே நாள்களில் 40 லட்சம் பேர் கையெழுத்திட்டனர்.

விபரம்
இலங்கையின் ஒலிம்பிக் குழுவுக்கு சுசந்திக்கா தலைமை.
20. ஜூலை 2008 07:24
PTR.
susanthika_runner.jpgசீனாவின் பீஜிங் நகரில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை குழுவுக்கு குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை, இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. விபரம்
இலங்கையின் துடுப்பாட்டக்காரர்களுக்கு இஷாந்த் ஷர்மா நெருக்கடி தருவார்: வாஸ்.
20. ஜூலை 2008 07:15
PTR.
chaminda_vaas.jpgஇலங்கை-இந்தியா டெஸ்ட் கிரிக்கட் தொடரில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, இலங்கை அணியின் துடுப்பாட்டக்காரர்களுக்கு நெருக்கடி வழங்குவார் என்று இலங்கையின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார். இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சு திறன் மெருகெறிவருவதாகவும் கூறினார். விபரம்
இங்கிலிஷ் பிரீமியர் லீக்கின் ‘இருபதுக்கு-20’ 2010இல் ஆரம்பம்.
20. ஜூலை 2008 06:39
PTR.
eng_t20_sample.jpgஇங்கிலிஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகள் 2010ஆம் ஆண்டு ஆரம்பமாகும் என்று இங்கிலாந்து-வேல்ஸ் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் 18 பிராந்திய அணிகளுடன், வெளிநாட்டு பிராந்திய அணிகள் 2 இணைக்கப்பட்டு மொத்தமாக 20 அணிகளுடன் போட்டிகள் நடைபெறும். விபரம்
எம்மவர் நிகழ்வு
சுவிஸ்சில் நடைபெற்ற 25வது ஆண்டு கறுப்புயூலை நினைவு கூரும் நிகழ்வு
25.JPGசிங்கள அரசின் இனவெறித்தனத்தால் தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட 1983 ஆம் ஆண்டு கறுப்புயூலையின் 25 ஆம் வருடத்தினை நினைவு கூரும் நிகழ்வு சுவிஸ் மகளிர்; அமைப்பின் ஏற்பாட்டில் 13.07.08 அன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில் நடைபெற்றது.  (படத்தொகுப்பு)
விபரம்