| ஐபிசி இன்னிசைக்குரல் 2008 – சுவிஸ் |
|
|
| . | |
| 12. May 2008 10:29 | |
ஐபிசி தமிழ் ஐந்தாவது ஆண்டாக நடாத்தும் இன்னிசைக்குரல் 2008 பாடல் போட்டி நிகழ்வு 11.05.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் வாழ் வர்த்தகப் பெருந்தகைகளின் பேராதரவில் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிறீ அவர்கள் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. ஐபிசி தமிழ் சுவிஸ் கலையகம் வழங்கிய வரவேற்புரையைத் தொடர்ந்து கௌசல்யன் கலைக்கூட மாணவிகள் வழங்கிய வரவேற்பு நடனம் இடம்பெற்றது. படத்தொகுப்பு
தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை கலை பண்பாட்டுக் கழக இசைக்குழுவினர் வழங்கிய இசையில் நடைபெற்ற இளம் இன்னிசைக்குரல் 2008, ஆண் இன்னிசைக்குரல் 2008, பெண் இன்னிசைக்குரல் 2008 போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன. மண்டபத்தில் திரண்டிருந்த மக்களின் இரசனையுடன் நடைபெற்ற பாடல் போட்டி நிகழ்வில் ஈழம் போய்ஸ் வழங்கிய மேற்கத்தேய நடனம், சிறப்புரை , பரதசேத்திரா நடனாலய மாணவிகளின் எழுச்சி நடனம், கனடாவில் இருந்து வருகை தந்த உளவளத்துறை பயிற்சியாளர் பிரான்சிஸ் சேவியர் அடிகளார் அவர்களின் உரை, கடந்த வருட இன்னிசைக்குரல் நிகழ்வில் பங்குபற்றி வெற்றி பெற்ற பாடகியின் கௌரவப்பாடல் என்பன இடம்பெற்றன. இப்போட்டி நிகழ்வின் நடுவர்களாக மதுரக்குரலோன் கண்ணன், திருமதி சோபா கண்ணன் கலந்து கொண்டு நடுவர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இளம் இன்னிசைக்குரல் வரதராஜன் வைஸ்ணவியும் முத்துக்குமார் பிரவீனாவும் தெரிவாகி மதிப்பளிக்கப்பட்டனர். ஆண் இன்னிசைக்குரல் 2008 பாலகுமார் பாலசுப்பிரமணியம் , ஆண் இணை இன்னிசைக்குரல் 2008 சிவகுரு குரு, பெண் இன்னிசைக்குரல் 2008 தர்சினி திலீபன், பெண் இணை இன்னிசைக்குரல் 2008 றெசீனா யோகசிங்கம் ஆகியோர் தெரிவாகி மதிப்பளிக்கப்பட்டனர்.
பாடகர்களுக்கான நினைவுப்பரிசுகளை ஐபிசி தமிழோடு கரம் கோர்த்து நிறஇகும் வர்த்தகப் பெருந்தகைகள் வழங்க நடுவர்கள், கலைஞர்கள், உளவளத்துறை பயிற்சியாளர் பிரான்சிஸ் சேவியர் அடிகளார் ஆகியோருக்கான நினைவுப் பரிசில்களை ஐபிசி தமிழ் சுவிஸ் கலையகத்தினர் வழங்கி மதிப்பளித்தனர். தொடர்ந்து ஐபிசி தமிழ் சுவிஸ் கலையகம் வழங்கிய நன்றியுரை இடம்பெற்றது.
இளம் இன்னிசைக்குரல் 2008 , ஆண் இன்னிசைக்குரல் 2008 , பெண் இன்னிசைக்குரல் 2008 ஆக தெரிவாகிய மூவரும் இவ்வருட இறுதியில் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய இன்னிசைக்குரல் நிகழ்வில் கலந்து போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|


