|
உலகின் மிகச் சிறந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா: அமெரிக்கப் பத்திரிகை |
|
|
|
வா.கி.குமார்
|
|
12. May 2008 21:37 |
உலகின் மிகச் சிறந்த தொழிலதிபர்களைத் தரவரிசைப் படுத்தியுள்ள் 'கோன்டேநாஸ்ட் போர்ட்போலியோ' எனும் அமெரிக்கப் பத்திரிகையொன்று, அப்பட்டியலில் ரத்தன் டாட்டாவுக்கு முதலிடம் வழங்கியுள்ளது.
மலிவு விலை நானோ காரை (2,500 டொலர் - 1 லட்சம் இந்திய ரூபாய்) அறிமுகப்படுத்தியதன் மூலம் மிகச் சிறப்பாகச் செயல்படும் தொழிலதிபர்களில் ஒருவராக ரத்தன் டாடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை செய்தி ஊடகத் துறையில் முன்னிலை வகிக்கும் ஸ்டார் குழுமத் தலைவர் ராபர்ட் முர்டோக் மற்றும் கோல்ட்மேன் சாஷ் நிறுவன தலைமை நிர்வாகி லாயிட் பிளாங்ஃபின் ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மலிவு விலைக் காரை அறிமுகப்படுத்தியதன் மூலம் பிறரும் இதே பாணியைப் பின்பற்றத் தூண்டியதில் ரத்தன் டாடாவின் பங்களிப்பு பிரதானமானது என 'கோன்டேநாஸ்ட் போர்ட்போலியோ' இதழில் குறிப்பிட்டுள்ளது.
ஓட்டோமொபைல் துறையின் எதிர்காலத்தை கணித்து அதற்கேற்ப செயலாற்றியவர் டாடா என்றும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
|