| வவுனியா வேப்பங்குளம் பகுதியில் தமிழ் இளைஞர் கடத்தப்பட்டார் |
|
|
| வா.கி.குமார் | |
| 13. May 2008 19:24 | |
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு தமிழ் இளைஞர் ஒருவர் வெள்ளைவானில் வந்தோரால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் வவுனியா – மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்தே இவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் அரச அலுவலகம் ஒன்றில் அலுவலக உதவியாளராக கடமையாற்றும் வாலசிங்கம் வாலமோகன்(29வயது) என்பரே கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு குறித்த இளைஞரின் வீட்டுக்கு வெள்ளைவானில் வந்த ஆறு பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய நபர்கள் வீட்டின் மின்விளக்குகளை அணைக்கக்கூறி விட்டு குறித்த நபரை கடத்திச்சென்றதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறையிடப்பட்டுள்ளது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|


வவுனியா வேப்பங்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு தமிழ் இளைஞர் ஒருவர் வெள்ளைவானில் வந்தோரால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.