|
யாழ் தெல்லிப்பளை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளார் |
|
|
|
வா.கி.குமார்
|
|
13. May 2008 20:42 |
|
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலய பிரதேசத்துக்குள் தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிஉயர் பாதுகாப்பு வலய பிரதேசமான தெல்லிப்பளை ,துர்க்கையம்மன் ஆலயத்துக்கு அருகில் வசித்துவந்த பரமநாதன் துஸியந்தன்(23வயது) என்ற இளைஞரே காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை காலை வீட்டை விட்டுசென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையென காணாமல்போனவரின் தந்தையாரால் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|