| நிவாரணப்பொருட்களுடன் சுவிஸ் விமானம் மியான்மாரை நோக்கி கிளம்பியது |
|
|
| ரி.என்.ஜே | |
| 14. May 2008 22:08 | |
மியான்மாரில் சூறாவளி அனர்த்தம் ஏற்பட்டு 12 நாட்களின் பின்னர் இன்று 20 தொன் நிவாரண பொருட்களுடன் மியான்மாரை நோக்கி சுவிற்சர்லாந்தின் விமானம் கிளம்பியது. வியாழன் காலை தலைநகர் யங்கூனை சென்றடையும் என எதிர்பார்க்கபடுகிறது.
விமானத்தில் சென்ற இரு நிவாரணப் பணி வல்லுனர்களும் ஏற்கனவே அங்குள்ள நான்கு பணியாளர்களுடன் இணைந்து கொள்வார்கள். சுவிஸ் வல்லுனர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையாளருடனும் உலக உணவுத்திட்டத்துடனும் இணைந்து நிவாரணப்பொருட்கள் விநியோகத்தில் பணியாற்றவுள்ளனர். சுவிற்சர்லாந்தின் தொண்டு நிறுவனங்கள் ஏற்கனவே தமது உள்ளூர் பங்காளர்கள் மூலம் ஏற்கனவே அங்கு நிவாரண பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றது. சுவிற்சர்லாந்தின் ஏனைய பல அரச சார்பற்ற உதவி நிறுவனங்களும் ஏற்கனவே அங்கு பிரசன்னமாகியுள்ளன. சுவிஸ் பொதுமக்கள் 1.3 மில்லியன் பணத்தை நிவாரணத்திற்காக அன்பளிப்பு செய்துள்ளனர் |
| < முந்தைய | அடுத்த > |
|---|