|
ஐரோ 2008 காலப்பகுதியில் பாலியல் தொழில் அதிகரிப்புக்கெதிராக மேலதிக கட்டுப்பாடுகள் |
|
|
|
ரி.என்.ஜே
|
|
18. May 2008 11:51 |
|
ஐரோ 2008 நடைபெறும் காலப்பகுதியில் சுவிற்சர்லாந்திலும் ஒஸ்ரியாவிலும் பாலியல் தொழிலாளர்களை கட்டுபடுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகளை சுவிஸ் அரசு மேற்கொண்டு வந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகார மட்டத்தல் திருப்தி தெரிவிக்கபட்டுள்ளது. சமீப காலமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்ததால் சட்டபூர்வ மற்றும் சட்டபூர்வமற்ற பாலியல் தொழில் அதிகரிப்புக்கான அறிகுறிகள் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
காபரே நடனப்பெண்களுக்கு வழங்கப்படும் குறுகிய கால வேலை அனுமதிப்பத்திரம் துஷ்பிரயோகம் செய்யபடுவதற்கான வாய்ப்பு உள்ளதால் பாசல், பேர்ன், சூரிச், ஜெனிவா ஆகிய நகரங்களின் வெளிநாட்டு காவற்துறையினரால், இவ்வகை தொழிலுக்காக வரும் பெண்களுக்கு முக்கியமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து இத்தொழிலுக்கு வரும் பெண்களுக்கு இவ்வகை குறுகிய கால வேலை (L அனுமதிப்பத்திரம்) அனுமதிப்பத்திரங்கள் புதிதாக வழங்கப்படவில்லை என்று என்று குறிப்பிட்டுள்ளனர்.
முக்கியமாக சூரிச், ஜெனிவா ஆகிய நகர காவற்துறையினர் இவ்விடயத்தில் கூடிய கவனமெடுத்துள்ளதாக அந்நகரங்களின் காவற்துறைப் பேச்சாளர்கள் தெரிவித்துள்ளார்கள். முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளபட்டதால் தம்மால் இதனை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
|