|
அதிவிரைவாக வாகனம் செலுத்துபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யபடவேண்டும் – போக்குவரத்து அம |
|
|
|
ஆக்கம்: ரி.என்.ஜே
|
|
18. மே 2008 13:46 |
|
வாகனங்களை அதிவேகமாக செலுத்துபவர்களின் (Raser) வாகனங்களை பறிமுதல் செய்து அழிக்கபட வேண்டும் என்ற தனது பழைய யோசனையை சுவிஸ் போக்குவரத்து அமைச்சர் மொறிஸ் லொய்யன்பேர்கர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சுவிற்சர்லாந்தில் வீதிவிபத்து இறப்புக்கள், காயமடைதல் ஆகியவற்றை குறைப்பதற்கான வழிமுறைகளை தாம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பாதைகாட்டும் கருவிகளில் (Navigation) வேகப்பதிவு ராடர்களை கண்டறியும் தொழிற்பாடுகளை வைத்திருத்தல், அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனங்களை செலுத்துதல் ஆகிய குற்றங்களுக்கான தண்டனைகள் மேலும் கடுமையாக்கபடவேண்டும், என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
வேகமாக வாகனம் செலுத்துவோர் வீதிப்பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சாதாரணமாக சட்டவிதிகளுக்கமைய வாகனம் செலுத்தும் வாகனச்சாரதிகள் மட்டுமன்றி அவர்களின் குடும்பங்களும் இவ்வாறானவர்களால் பாதிப்புக்குள்ளவதால் இவர்களுக்கு கடும் தண்டனை வழங்கபடவேண்டும் என்பதில் பல்வேறு தரப்பினரிடம் ஒற்றுமை காணப்படுகிறது.
மேலும் போக்குவரத்து குற்றங்களுக்காக வழங்கபடும் தண்டனை பணத்தினால் பெறப்படும் வருமானம் பொதுவான அரச வருமானமாக கருதாமல் அப்பணம் கல்வி மேம்பாட்டுக்காக பயன்படுத்தபடவேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
|