|
சுவிற்சர்லாந்தின் தேசிய தொலைக்காட்சி விவாதஅரங்கின் புதிய சாதனை |
|
|
|
ஆக்கம்: ரி.என்.ஜே
|
|
18. மே 2008 23:09 |
சுவிற்சர்லாந்தின் தேசிய தொலைக்காட்சியான Schweizer Fernsehen (SF) ல் வாராவாரம் நடைபெறும் “அறேனா” என்னும் அரசியல் சமூக விவாத நிகழ்ச்சி கடந்த வாரம் பார்வையாளர்கள் வகையில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. வெள்ளியன்று முக்கிய இரு தலைவர்கள் கலந்து கொண்ட இவ்விவாத அரங்கு 810`000 பார்வையாளரை ஈர்த்து சாதனை படைத்துள்ளது.
சமீபத்தில் பதவியை விட்டு வெளியேற்றபட்ட தேசியவாதியான கிறிஸ்தோப் புளொஹ்ஹரும், அவரின் கட்சியை சேர்ந்தவரும் அவரின் இடத்திற்கு அமைச்சராக தெரிவு செய்யபட்டு தற்போது மக்கள்கட்சி வட்டாரங்களில் சர்ச்சைக்குரியவராகியுள்ள திருமதி எவலின் விட்மரும் நேரடியாக முதற்தடவை சந்தித்து கொண்ட நேரடி நிகழ்வாதலால் இவ்விவாத அரங்கம் மக்கள் மத்தியில் மிகவும் ஆர்வத்தை ஏற்பட்டுத்தியிருந்தது.
இதற்கு முன் 2001 ம் ஆண்டு சுவிஸ்எயர் நிறுவன வீழ்ச்சியின் போது நடைபெற்ற விவாத்ததில் 679`000 பார்வையாளர்கள் பார்வையிட்டு அன்று சாதனையை நிலைநாட்டியிருந்தனர்.
2007 ம் ஆண்டு இவ்விவாத அரங்கை சராசரியாக 234`000 பேர் பார்வையிட்டிருந்தார்கள்.
|