20. August 2008 20:20
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
16. August 2008 15:10
8. August 2008 18:51
14. August 2008 16:37
27. July 2008 09:43
30. July 2008 06:43
மூன்று வாரங்களில் தமிழகத்துக்கு 270 ஈழத்தமிழ் அகதிகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
19. May 2008 22:40
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் மோதல்கள் உக்கிரமடைந்திருப்பதால கடந்த மூன்று வாரங்களில் இந்தியாவின் தமிழகத்துக்கு 270 ஈழ அகதிகள் சென்றுள்ளனர்.

ஈழத்தமிழ் அகதிகளின் வருகை அதிகரித்திருப்பதுடன், கடந்த வெள்ளிக்கிழமை தனுஷ்கோரிக்கு 15 பேர் சென்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, 6 சிறுவர்கள் உட்பட இராமேஸ்வரத்துக்கு அண்மித்த கடற்பரப்பில் மணல் திட்டில் 17 மணித்தியாலங்கள் தத்தழித்துக்கொண்டிருந்த 16 பேரை இந்தியக் கடற்படையினர் மீட்டு, மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் கடல்மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைவதற்கு முயற்சிப்பதாகக் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து கரையோரப் பாதுகாப்பை இந்தியக் கடற்படையினரும், கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரும் பலப்படுத்தியிருப்பதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்திய விமானப்படையினரும், கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் கடற்படையினர் தமது செயற்பாடுகளை தீவிரப்படுத்தியிருப்பதுடன், எந்த நேரமும் அவர்கள் விழிப்பாக வைக்கப்பட்டிருப்பதாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

இதுஇவ்விதமிருக்க இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 
< முந்தைய   அடுத்த >