|
ஆசியான் நாடுகளின் ஒருங்கிணைப்புடன் சர்வதேச உதவிகளை அனுமதிக்க மியன்மார் இணக்கம் |
|
|
|
வா.கி.குமார்
|
|
19. May 2008 22:46 |
சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெற்காசிய நாடுகளின் ஒருங்கிணைப்புடன் வெளிநாட்டு உதவிகளை வழங்க சிங்கப்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசிய நாடுகளின் நாடுகளின் அவசர கூட்டத்தில் மியன்மார இணங்கியுள்ளது.
சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டொலர் என மியன்மார் கணக்கெடுத்திருப்பதாக ஆசியான் மாநாட்டில் கலந்துகொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் ஜியோர்ஜ் ஜியோ தெரிவித்தார்.
“ஆசியான் தலைமையிலான ஒருங்கிணைப்பு பொறிமுறையை முன்னெடுப்பதற்கு வெளிவிவகார அமைச்சுகள் இணங்கியுள்ளன” என்றார் அவர்.
சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச உதவிவழங்கும் மாநாட்டை எதிர்வரும் 25ஆம் திகதி மியன்மாரின் முக்கிய நகரமான லன்கோனில் வைப்பது தொடர்பாக ஐக்கிய சபையுடன் இணைந்து ஆராய்ந்து வருவதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
தென்கிழக்காசிய நாடுகளின் மருத்துவக் குழுக்களை அனுமதிப்பதற்கும் மியன்மார் இணங்கியுள்ளது என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
|