|
மூன்று நாட்கள் சீனாவில் தேசிய துக்கதினம் |
|
|
|
ஆக்கம்: வா.கி.குமார்
|
|
19. மே 2008 23:23 |
பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டமைக்கு கவலை தெரிவித்து தேசியக் கொடிகளை மூன்று நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும், ஒலிம்பிக் ஜோதி ஏனைய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதை மூன்று நாட்கள் தற்காலிகமாக நிறுத்துமாறும் சீனா அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் சீன அரசாங்கத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவிருப்பதுடன், பீஜிங்கின் தியானமான் சதுக்கத்தில் இராணுவத்தினர் நாளாந்தம் ஏற்றும் சீனத் தேசியக் கொடி மூன்று நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவுள்ளது.
8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 50,000ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி 2.28 மணிக்கு 3 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதுடன், தொடர்ச்சியான மழையால் மீட்புப் பணிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் சீன ஜனாதிபதி கூஜிந்தாவோ நன்றி தெரிவித்துள்ளார்.
|