|
மலேஷிய ஆளும் கட்சியிலிருந்து முன்னாள் பிரதமர் மஹாதிர் விலகல் |
|
|
|
ஆக்கம்: வா.கி.குமார்
|
|
20. மே 2008 09:48 |
மலேஷியாவின் தற்போதைய பிரதமர் அப்துல்லா பதாவி மீது தனக்கு நம்பிக்கை குறைந்துவிட்டதெனக் கூறி, முன்னாள் மலேஷியப் பிரதமர் மஹாதிர் முகம்மது ஆளும் கட்சியான யூ.எம்.என்.ஓ.விலிருந்து பதவி விலகியுள்ளார்.
தன்னைப் போலவே மற்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மஹாதிர் முகம்மது, அப்துல்லா பதாவி பிரதமர் ஆசனத்திலிருந்து இறங்கினால் மாத்திரமே, தான் மீண்டும் கட்சியில் இணைவதாக கூறினார்.
இருபது ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் மலேஷியாவில் ஆட்சி செய்த மஹாதிருக்கு அந்த நாட்டில் பெரும் செல்வாக்கு இருக்கிறது.
இதேவேளை மஹாதிர் கட்சியிலிருந்து விலகியது குறித்து பிரதமர் அப்துல்லா ஆச்சரியத்தை வெளியிட்டதுடன,தான் பதவியிறங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மலேஷியா சுதந்திரமடைந்ததிலிருந்து தொடர்ந்து ஆண்டுவருகின்ற யூ.எம்.என்.ஓ. மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு, இந்த ஆண்டின் முற்பகுதியில் நடந்து முடிந்ந தேர்தலின் முடிவே இதுவரையில் அவை சந்தித்த மோசமான முடிவாக அமைந்திருந்தது.
|