20. ஜூலை 2008 10:58
 
 
புத்தலையில் காவலரண் மீது தாக்குதல் - ஊர்காவல் படைவீரர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
20. மே 2008 10:27
மொனராகலை மாவட்டம் புத்தல கோணாகலை பகுதியில் காவலரண் ஒன்றின்மீது நேற்று திங்கட்கிழமை இரவு தமிழீழ விடுதலைப்புலிகள்  மேற்கொண்ட தாக்குதலில் ஊர்காவல் படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு 10.40 மணியளவில் கதிர்காமம் - புத்தல வீதியில் உள்ள கோணமலை பிரதேசத்தின் 38ஆம் கட்டை காவலரண்மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் சுமித் சஞ்ஜீவ்(26வயது) என்ற ஊர்காவல் படையினரே கொல்லப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலையடுத்து அக்காவலரணில் இருந்த ஆயுதங்கள் சிலவற்றையும் தமிழீழ விடுதலைப்புலிகள் கைப்பற்றிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்;ந்து அப்பகுதியில் படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு கடும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
< முந்தைய   அடுத்த >