20. ஜூலை 2008 10:51
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
5. ஜூலை 2008 06:59
26. ஜூன் 2008 06:38
16. ஜூன் 2008 00:19
30. ஜூன் 2008 18:50
16. ஜூன் 2008 00:09
பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாமென்ற கருணாநிதியின் அழைப்பை புறக்கணியுங்கள்- அன்பழகன் வேண்டுக அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
20. மே 2008 10:44
anbalagan.jpgதனது பிறந்த தினத்தை கொண்டாட வேண்டாமென்ற தமிழக முதலமைச்சரும் தி.மு.க.தலைவருமான கருணாநிதியின் வேண்டுகோளை புறக்கணிக்குமாறும் பிறந்தநாளை வெகுவிமர்சையாகக் கொண்டாடுமாறும் தி.மு.க.செயலாளரும் அமைச்சருமான அன்பழகன் அழைப்பு விடுத்திருக்கிறார்.

கருணாநிதியின் பிறந்ததினம் ஜூன் 3 ஆம் திகதியாகும். அந்த நாளைச் சிறப்பாக கொண்டாடுவதே கவலைக்கான ஒரே மருந்து என்று அன்பழகன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அன்பழகன் விடுத்த அறித்கையில் தெரிவித்திருப்பதாவது,

பிறந்ததினத்தில் ஒருவரும் தன்னை வந்து சந்திக்கக் கூடாதென கருணாநிதி தெயிவித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளித்துள்ளது. கட்சி ஆதரவாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதனையிட்டு நான் வியப்படைந்தேன். உள,உடல் உபாதைகளை தவிர்ப்பதற்காகவே இவ்வாறு கூறியிருக்கிறார். அதாவது பிறந்ததினமன்று வருகை தருவோரை வரவேற்கும் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஏதோவொன்று அவரை கவலைக்குள்ளாக்கியிருப்பதாக தோன்றுகிறது. பிறந்ததினக் கொண்டாட்டங்களே அவரது கவலைகளுக்கு ஒரே நிவாரணியாகும். கட்சியின் சகல பிரிவுகளும் அவரின் பிறந்ததினத்தை விமர்சையாக கொண்டாட வேண்டும்.

இன்றிலிருந்து அதனை ஆரம்பிக்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தின் நிச்சயமற்ற நிலை, நாட்டை அச்சுறுத்தும் பயங்கரவாதம், அவருடன் நெருங்கியிருப்போரின் துரோகம் என்பனவே அவரை கவலை கொள்ள வைத்திருக்கும் காரணங்களாகும்.

சேதுசமுத்திரத் திட்டத்தை அமுல்படுத்த சில தடைகள் ஏற்பட்டபோதும் உரிய நேரத்தில் அது நிறைவேற்றப்படும். துரோகத்தனம் கருணாநிதிக்கு புதிய விடயமல்ல. இந்த மாதிரியான பல விடயங்களை அவருடைய அரசியல் வாழ்வில் அவர் எதிர்கொண்டுள்ளார்.

பிறந்தநாளை கொண்டாடுவதில்லையென்ற கலைஞரின் தீர்மானம் அவருக்கு துரோகம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை மகிழ்ச்சியிலாழ்த்தும் என்றும் அன்பழகன் கூறியுள்ளார்.

கருணாநிதியின் பிறந்ததினத்துக்கு முதல்நாளான ஜூன் 2இல் தி.மு.க.பொதுச்சபை கூடுகிறது. அன்றையதினம் கட்சியின் யாப்பு திருத்தப்பட்டு தி.மு.க.வுக்கு உதவித் தலைவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

கருணாநிதியின் மகன் அழகிரியை உதவித் தலைவராக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 
< முந்தைய   அடுத்த >