20. ஜூலை 2008 10:53
 
 
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பால் மரணம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
20. மே 2008 18:06
balraj.jpgதமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். (2ம் இணைப்பு)

அறிக்கையின் விபரம்:

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்

இன்று செவ்வாய்க்கிழமை (20.05.08) பிற்பகல் 2:00 மணியளவில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மாரடைப்பால் சாவடைந்துள்ளார் என்பதனை தமிழ்மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். 21, 22, 23.05.2008 ஆகிய 3 நாட்களும் தேசிய துயர நாட்களாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படங்கள்:புலிகளின் குரல்


பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழ விடுதலைப் புலிகளால் 1991 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் முதலாவது கட்டளைத் தளபதி ஆவார். 1993 ஆம் ஆண்டு வரையும் 1995-1997 ஆம் ஆண்டு காலப் பகுதிகளிலும் அவர் அப்பொறுப்பை வகித்தார்.

 
< முந்தைய   அடுத்த >