| மட்டக்களப்பு பெரிய உப்போடைப்பகுதியில் துப்பாக்கிச்சூடு - பொலிஸ் கான்ஸ்டபில் பலி |
|
|
| வா.கி.குமார் | |
| 20. May 2008 18:28 | |
மட்டக்களப்பு பெரிய உப்போடைப்பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை இரவு 6.15 மணியளவில் அரசடிச்சந்தி காவலரணில் இருந்து பெரிய துவிச்சக்கரவண்டியில் உப்போடை பகுதிக்கு காவல் கடமைக்காக சென்றபோது இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இரண்டு இளைஞர்கள் இவர் மீது துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அரசடிச்சந்தி காவலரணில் கடமையாற்றும் எம்.திஸாநாயக்க(30வயது)என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் மீது நான்கு துப்பாக்கிவேட்டுகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மைக்ரோ ரக பிஸ்டோலின் மூலமே இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதியை சுற்றிவளைத்துள்ள விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் படையினரும் கடும் தேடுதல் மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர். |
| < முந்தைய | அடுத்த > |
|---|




மட்டக்களப்பு பெரிய உப்போடைப்பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




