20. ஜூலை 2008 10:57
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
28. ஜூன் 2008 23:53
7. ஜூலை 2008 19:41
28. ஜூன் 2008 15:18
23. ஜூன் 2008 21:38
26. ஜூன் 2008 06:38
சினைப்பர் தாக்குதல் விசேட அதிரடிப்படைவீரர் படுகாயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
20. மே 2008 19:09

sniper.jpgஅம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவஸ்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தமிழீழ விடுதலைப்புலிகளின் சினைப்பர் தாக்குதலில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் ரூவஸ்குளத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினரின் முகாமுக்கு முன்பாகவே இந்த சினைப்பர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரின் முகாமுக்கு முன்பாக உள்ள காவலரணில் மூன்று விசேட அதிரடிப்படையினர் காவல் கடமையில் ஈடுபட்டுவருவதாகவும் அதில் ஒருவர் காவலரணுக்கு முன்பாக நின்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர் அம்பாறை போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியூடாகவே பொத்துவிலில் இருந்து கஞ்சிகுடிச்சாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதி நோக்கியதான வழங்கள் பாதை உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

 

 
< முந்தைய   அடுத்த >