| தொடரும் மேவின் சில்வாவின் அடாவடித்தனம் - சிரச ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் |
|
|
| வா.கி.குமார் | |
| 20. May 2008 19:39 | |
கொழும்பு கிரிபத்கொட பிரதேசத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை இரவு இலங்கையின் பிரபல சிங்கள தனியார் தொலைக்காட்சி(சிரச) ஊடகவியலாளர்கள் மீண்டும் அமைச்சர் மேவின் சில்வாவின் குண்டர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இரவு வெசாக் தொடர்பான செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் வெசாக் வளைபை படம்பிடிக்க முற்பட்டவேளையில் அவ்விடத்துக்கு வந்த குழுவினர் படம்பிடிக்க முடியாது எனக்கூறவே குறித்த ஊடகவியலாளர்கள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வெளியேற எத்தனிக்கையில் அமைச்சருடன் கதைத்த பின்னரே நீங்கள் இவ்விடத்தை விட்டுசெல்லலாம் என மிரட்டியுள்ளனர். பின்னர் அமைச்சரென யாரோ ஒருவரிடம் உரையாடிவிட்டு வந்த அவர்கள் புகைப்படப்பிடிப்பாளரின் கையில் இருந்த வீடியோ கமராவை பறித்து நிலத்தில் அடித்து உடைத்துள்ளனர். பின்னர் அனைவரையும் ஊடகவியலாளர்கள் சென்ற வானிலேயே ஏற்றி பெற்றோல் ஊற்றி வனோடு எறிக்க முற்பட்டுள்ளனர். இதனையடுத்து குண்டர்களிடம் இருந்து தப்பிச்சென்றபோது அப்பகுதியில் காவல் கடமையில் இருந்த பொலிஸாரிடம் இது தொடர்பில் முறையிட்டபோதும் அவர்கள் அப்பகுதியை விட்டு நகர்ந்துவட்டதாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர். இதன்போது குறித்த ஊடகவியலாளர்கள் பயணம் செய்த வானும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






கொழும்பு கிரிபத்கொட பிரதேசத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை இரவு இலங்கையின் பிரபல சிங்கள தனியார் தொலைக்காட்சி(சிரச) ஊடகவியலாளர்கள் மீண்டும் அமைச்சர் மேவின் சில்வாவின் குண்டர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




