| தமிழ் மக்கள் கடத்தப்படும் சம்பவங்களை நிறுத்தாவிடின் போராட்டம் - திஸ்ஸ அத்தநாயக்க |
|
|
| வா.கி.குமார் | |
| 20. May 2008 20:08 | |
கடத்தல்களை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எமது போராட்டம் ஆரம்பமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் கண்டி மாவட்ட எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கடத்தல்கள், காணாமல் போதல் சம்பவங்கள் குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ்வதற்கு உரிமையுண்டு. அதனை பறிப்பதென்பது மனித உரிமை மீறலாகும்.அண்மைக் காலங்களாக தமிழர் கடத்தல், கப்பம் பெறல், கொலை சம்பவங்கள் என்பன அதிகரித்துள்ளன. இதனை ஒரு போதும் ஏற்க முடியாது. தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அத்தோடு கடத்தப்படுவது கப்பம் பெறுவது, கொலை சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி அவற்றை தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சர்வதேச மற்றும் தேசிய மனித உரிமை அமைப்புக்களை சந்தித்து தெளிவுபடுத்த ஐ.தே. கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு ஆர்ப்பாட்டங்களை நடத்தும். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சர்வதேச சமூகம் குற்றம் சாட்டுவதோடு உதவிகளை நிறுத்தவும் முயற்சித்துவரும் நிலையில் கடத்தல்கள் உட்பட மனித உரிமை மீறல்கள் அதிகரித்திருக்கின்றமை நாட்டுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். காட்டுச் சட்டத்தை ஒழித்து நாட்டுச் சட்டத்தை நிலைநாட்டுவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி காட்டுச் சட்டம் தலைவிரித்தாடுவதை கண்டும் காணாமலும் இருக்கின்றார். எனவே எந்த இனத்தவராகட்டும் அனைவரும் அச்சமின்றி வாழும் சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். |
| < முந்தைய | அடுத்த > |
|---|




கடத்தல்களை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எமது போராட்டம் ஆரம்பமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் கண்டி மாவட்ட எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.



