| புயல் பாதித்த மியான்மரில் ஆயிரக்கணக்கான சிறார்கள் பட்டினிக்கு இரையாகும் அபாயம்! |
|
|
| வா.கி.குமார் | |
| 20. May 2008 20:13 | |
சூறாவளியின் சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான மியான்மரில் ஆயிரக்கணக்கான சிறார்கள் பட்டினியால் மடியும் அபாய நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச தொண்டர் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
தற்போது பாதிப்புக்குள்ளான பகுதிகளில் போதிய உணவுபொருட்கள் இல்லாததால் இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் அந்நாட்டில் ஏராளமானோர் பட்டினிக்கு இரையாகும் நிலை ஏற்படலாம் எனவும் அவை எச்சரித்துள்ளன. இந்நிலையில் பிறநாடுகளின் உதவியை தடையின்றி அனுமதிக்க வேண்டும் என்று மியான்மரின் இராணுவ ஆட்சியாளர்களை அனைத்து நாடுகளும் வற்புறுத்த வேண்டுமெனவும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளன. இதேவேளை இராணுவ ஆட்சியாளர்கள் இவ் விடயத்தில் தங்களின் கடும் போக்கை கைவிட்டு நாட்டு மக்களின் நன்மை கருதி அதிரடியான செயற்பாடுகளில் இறங்கி பாதிக்கபட் மக்களை உடனடியாக அவர்களது நிலையில் இருந்து மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைளிலும் சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்கும் படியும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் காட்டமான வேண்டுகோள் ஒன்றை மியன்மார் அரசுக்கு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|




சூறாவளியின் சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான மியான்மரில் ஆயிரக்கணக்கான சிறார்கள் பட்டினியால் மடியும் அபாய நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச தொண்டர் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.




