29. August 2008 19:53
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
16. August 2008 15:10
8. August 2008 18:51
2. August 2008 23:48
21. August 2008 23:30
3. August 2008 21:01
திமுக ஆட்சியில் எந்தப் பயனும் இல்லை : விஜயகாந்த் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. May 2008 20:23

viajaya.jpg2 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை. கூட்டணி கட்சியினரும் திமுக அரசின் 2 ஆண்டுகால செயல்பாட்டை குறைகூறியுள்ளனர்.

இவர்கள் குறிப்பிடும்படி சாதனை செய்திருந்தால் அவை மக்களை தானாகவே சென்றடைந்திருக்கும். ஆனால் அவற்றை இவர்கள் விளம்பரம் செய்யும் அளவுக்கு உள்ளது என்றார் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தான் வெற்றிபெற்ற விருத்தாசலம் தொகுதிக்கு திங்கள்கிழமை வந்தார். எம்ஏல்ஏ அலுவலகத்தில் இருந்தபடியே தொகுதி வாசிகளை சந்தித்து அவர்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். பின்னர் ஒருசிலருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்து வருவதற்கு அரசின் தவறான கல்விக் கொள்கைதான் காரணம்.

240 வோல்ட் மின்சாரம் வரவேண்டிய இடத்தில் இன்று 120 வோல்ட் மின்சாரம் கிடைக்கிறது. இதனால் என்ன பயன்?

விலைவாசி உயர்வு என்பது உற்பத்தியாளர்கள் கையில் உள்ளது. அவர்களை அழைத்து அரசு பேசவேண்டும். ஆன்லைன் வர்த்தகம் வெளிநாடுகளுக்கு வேண்டுமானால் ஒத்துவரும். நம்நாட்டிற்கு அவை ஒத்துவராது.

இதை அரசு உணரவேண்டும். எம்எல்ஏ மேம்பாட்டு நிதியை முழுஅளவில் எனது தொகுதியில் பயன்படுத்தியுள்ளேன்.

கடந்த 2006-07-ம் ஆண்டில் ரூ.1 கோடியே 27 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு 206 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று 2007-08-ம் ஆண்டில் ரூ.1 கோடியே 29 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 97 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மொத்தம் இதுவரை ரூ.3 கோடியே 85 லட்சம் செலவில் 373 பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

எனது சொந்த முயற்சியில் மந்தாரக்குப்பத்தில் இளைஞர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் வைக்க இடம் தேர்வுசெய்தேன்.

ஆனால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் இடம் கொடுக்க முன்வந்தவரை இரவோடு இரவாக மிரட்டி, அந்த இடத்தைக் கொடுக்கக்கூடாது என்கிறார்.

இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகம் அனைத்து இடத்திலும் உள்ளது. இதே விருத்தாசலத்தில் திமுக நகரச் செயலர், நகராட்சிக்கு சொந்தமான 12 கடைகளை தன் கட்சிக்காரருக்கு கொடுக்கவேண்டும் என நகர்மன்ற ஆணையருக்கு கடிதம் கொடுத்துள்ளார் என்றார் விஜயகாந்த்.

 
< முந்தைய   அடுத்த >