20. November 2008 17:20
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
13. October 2008 13:01
15. October 2008 12:52
29. September 2008 22:52
19. August 2008 23:28
3. October 2008 18:45
இலங்கையை நிராகரிக்குமாறு 3 கண்டங்களிலிருந்து அழைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
21. May 2008 10:58

noal.jpgஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பினராக இலங்கை தெரிவு செய்யப்படுவதை நிராகரிக்குமாறு மூன்று கண்டங்களைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பிரமுகர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக, வினைத்திறன் வாய்ந்த மனித உரிமைகள் பேரவைக்கான அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின்கூட்டணி நேற்று முன்தினம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவின் டெஸ்மண்ட் டுட்டு, ஆர்ஜன்ரீனாவின் அடொல்போ பெரஸ் எஸ் கியூவல், அமெரிக்காவின் ஜிம்மி காட்டர் ஆகிய நோபல் பரிசை வென்றெடுத்த மூன்று பிரபல்யமானவர்களே இலங்கையின் மனித உரிமை மீறல் பதிவுகளின் அடிப்படையில் பேரவையின் உறுப்பினராக இலங்கை தெரிவு செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் பேரவைக்கான உறுப்பினர் தேர்தல் இன்று புதன்கிழமை நியூயோர்க்கில் இடம்பெறுகின்றது.

மனித உரிமைகள் தொடர்பான உயர்ந்த தரத்தினை கடைப்பிடித்து, பேரவைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

லண்டன் `த கார்டியன்' பத்திரிகையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தென்னாபிரிக்க பேராயர் டெஸ்ட்மண்ட் டுட்டு தெரிவித்திருந்த விமர்சனம் வெளியாகியிருந்தது.

இலங்கை அரச படையினரால் மேற்கொள்ளப்படும் கிரமமான மனித உரிமை மீறல்கள் மிகவும் பாரதூரமானவையெனவும் பரந்தளவில் சித்திரவதைகளும் நீதி விசாரணைக்கு புறம்பான படுகொலைகளும் இடம்பெற்றிருப்பதாகவும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கமே பொறுப்பு என்றும் குறிப்பிட்டிருந்த டெஸ்மண்ட் டுட்டு, மனித உரிமை பேரவை உறுப்பினராக இலங்கை தேர்ந்தெடுக்கப்படும் முயற்சியிலிருந்து தோல்வி காண்பதை உறுதிப்படுத்துமாறும் கோரியிருந்தார்.

இதேவேளை, ஆர்ஜன்ரினாவின் நோபல் பரிசு பெற்ற அடொல் போபெரஸ் எஸ் கியூவெல் `பியூனோஸ் எயார்ஸ்' பத்திரிகையில் எழுதியிருக்கும் விமர்சனக் கட்டுரையில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், கடத்தல்கள், காணாமல் போதல், சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் என்பன 1970-1980 காலப் பகுதியில் பல்வேறு இலத்தின் அமெரிக்க அரசாங்கங்கள் தமது சொந்தப் பிரஜைகளுக்கு எதிராக மேற்கொண்ட முறைகேடான யுத்தத்தைப் போன்றதொன்று என்று ஒப்பிட்டு குறிப்பிட்டிருப்பதுடன், இலங்கை மக்களுக்கு இலத்தின் அமெரிக்க அரசுகளால் மேற்கொள்ளப்படக்கூடிய அளப்பரிய சேவையாக அமைவது மனித உரிமைப் பேரவையில் இலங்கை உறுப்பினராவதை நிராகரிப்பதேயாகுமென குறிப்பிட்டிருக்கிறார்.

நோபல் பரிசு பெற்றவரும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியுமான ஜிம்மி காட்டரும், இலங்கையை மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக மீண்டும் தெரிவு செய்ய வேண்டாமென அழைப்பு விடுத்திருக்கிறார்.

மனித உரிமைகள் பேரவை 2006 இல் உருவாக்கப்பட்டதிலிருந்து இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பதிவுகள் மோசமானதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

 
< முந்தைய   அடுத்த >