| கடுகஸ்தொட்டை ரயில் பால குண்டு வெடிப்பு தொடர்பில் இருவர் கைது |
|
|
| வா.கி.குமார் | |
| 21. May 2008 14:57 | |
கட்டுகஸ்தொட்டை ரயில் பால குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளியிடமொன்றிலிருந்து வந்து கட்டுகஸ்தொட்டையில் தங்கியிருந்தபோதே இவர்களை கைது செய்ததாகவும், இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கட்டுகஸ்தொட்டை ரயில் பாலத்தில் குண்டு வைக்கப்பட்டமை தொடர்பில் விஷேட பொலிஸ் குழுவொன்றை கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்டுகஸ்தொட்டை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடம்பெற்ற இடத்தில் சுமார் நான்கு அடி நீளத்திற்கு தண்டவளம் சேதமடைந்துள்ளதாகவும், பொலிஸ் மற்றும் கடற்படையினர் இணைந்து தற்போது அப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|

