20. November 2008 13:48
 
 
இலங்கையில் நீதிச்சேவையின் செயற்பாடு சிறப்பாக இல்லை - பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
21. May 2008 20:49
sarath_n_silva.jpgஇலங்கையில் நீதிச்சேவையானது சுயாதீனமாகவும் பக்கச்சார்பற்ற விதத்திலும் செயற்படுவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு சிறப்பாக இல்லையென பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளின் சம்பளம் இலங்கை அரசினால் குறைக்கப்பட்டுள்ளது தொடர்பான வழக்கொண்று இன்று உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போதே பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளின் சம்பளம் குறைக்கப்பட்டது தொடர்பில் அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இவ்வாறான நீதிச்சேவையை புறக்கணிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டால் தாம் பதவி விலகுவதைத்தவிர வேறு வழியில்லை எனவும் பிரதம நீதியரசர் எச்சரித்துள்ளார்.

சுயாதீனமானதும் பக்கச்சார்பற்ற விதத்திலும் செயற்படும் நீதிச்சேவை தொடர்பாக இலங்கை அரசின் செயற்பாடு தொடர்பில் இலங்கை அரசின் செயற்பாடு சிறப்பாக இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 
< முந்தைய   அடுத்த >