| கட்டுகஸ்தோட்டை ஆற்றில் பெண்னொருவரின் சடலம் மீட்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 21. May 2008 20:59 | |
|
கண்டி கட்டுகஸ்தோட்டை ஆற்றில் இருந்து இன்று புதன்கிழமை காலை பெண்னொருவரின் சடலத்தை படையினர் மீட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கட்டுகஸ்தோட்டை பாலம் மீதான குண்டுத்தாக்குதலையடுத்து அப்பகுதியில் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து கடும் தேடுதல் மேற்கொண்டனர். இதன்போது பாலத்துக்கு கீழ் பகுதியில் இருந்து இந்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் இவர் சில தினங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டு அல்லது தற்கொலைசெய்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கமைய சடலம் அடையாளங்காண்பதற்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|

