| சுவிஸ் சூரிச்சில் நடைபெற்ற சிறப்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கான வீரவணக்க நிக |
|
|
| சுவிஸ் நிருபர் | |
| 25. May 2008 21:27 | |
தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு 25.05.2008 ஞாயிற்றுக்கிழமை மாலை சுவிஸ் சூரிச் Volkshaus மண்டபத்தில் நடைபெற்றது. படத்தொகுப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வீரவணக்க நிகழ்வின் முதல் நிகழ்வாக மேடையில் சிறப்பாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைச் செயற்பாட்டாளர் கணேசதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் குலம் அண்ணா அவர்கள் மாலை அணிவித்தார். தொடர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது. பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவைச் சுமந்து வெளியான பாடல்கள் மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருக்க மண்டபத்தை நிறைத்திருந்த மக்கள் அணிவகுத்துச் சென்று தங்கள் தாயகம் மீட்ட சமர்க்கள வீரனுக்கு தம் மலர் வணக்கத்தைச் செலுத்தினார்கள். கனடாவிலிருந்து வருகை தந்த உளவளத்துறை பயிற்சியாளர் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் அடிகளார் பிரான்ஸ் தமழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சுகிர்தராஜ் ஆகியோரின் வீரவணக்க உரைகளும் இடம்பெற்றன. தொடர்ந்து ஊடகவியலாளர்கள் கனகரவி, சண் தவராஜா ஆகியோரின் வீரவணக்க உரைகளும் ஆலயங்கள், நிறுவனங்கள், கழகங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை உப அமைப்புக்களின் வீரவணக்கக் கவிதைகளும் இடம்பெற்றன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சமர்க்களமாடிய வீரனின் சாதனைப் பதிவுகள் விவரணக் காட்சிகளின் தொகுப்பாக அகன்ற திரையரங்கில் காண்பிக்கப்பட்டது. இவற்றை விட சுவிசில் உள்ள ஆலயங்கள், நிறுவனங்கள், கழகங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை உப அமைப்புக்கள் மலர் வளையங்களைச் செலுத்தி தமது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் நினைவு சுமந்த பிரசுரங்களையும் வெளியிட்டிருந்தனர். |
| < முந்தைய | அடுத்த > |
|---|





தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு 25.05.2008 ஞாயிற்றுக்கிழமை மாலை சுவிஸ் சூரிச் 
