| சிறுத்தீவில் கலங்கிய கடற்படை: தீரம் குறையவில்லை என்ற கடற்புலிகள். |
|
|
| தமிழீழத்தில் இருந்து த.பகலவன். | |
| 30. May 2008 15:00 | |
யாழ்ப்பாணம் மண்டைதீவுக்கு அருகாமையில் கடற்படையினரின் முக்கிய தகவல் மற்றும் பாதுகாப்பு பரிமாற்ற மையமாக செயற்படும் சிறுத்தீவு கடற்படை முகாம் மீது கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ பிரிவினார் வியாழக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் மேற்கொண்ட ஈரூடக தாக்குதலானது பாதுகாப்பு தரப்பினரை திகிலடைய வைத்துள்ளது.
குறித்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி விட்டு கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் முக்கிய தகவல் பரிமாற்ற கருவிகளை மீட்டுக்கொண்டு வெற்றியுடன் தமது தளம் திரும்பியிருக்கின்றனர்.
இதன் மூலம் தமது தீரம் இன்னும் குறையவில்லை என்று விடுதலைப் புலிகள் மீண்டும் இலங்கை அரசாங்கத்துக்கும், சர்வதேசத்துக்கும் சொல்லியுள்ளனர்.
பூநகரி பகுதியில் இருந்து விரைந்து வந்த கடற்புலிகளின் சிறப்பு கொமோண்டோக்கள் வியாழக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் சிறுத்தீவு படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தி சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரப்பகுதி தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்துள்ளனர்.
இதன்போது கடற்படையினரின் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படும் அதிநவீன கருவிகளையும், ஆயுதங்கiயும் கைப்பற்றியுள்ளதுடன், எடுத்துச் செல்ல முடியாதவற்றை முற்றாக அழித்துள்ளனர்.
குறித்த முன்னகர்வு நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளினால் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டது. முன்னகர்வு நடவடிக்கைகளில் தோல்வியடைந்த இராணுவத்தினர் பின்வாங்கிச் சென்று மண்டைதீவு மற்றும் அதனைச் சூழவுள்ள தீவுப்குதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
குறித்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவு துரித வளர்ச்சியடைந்து வந்தது. இதனையடுத்து மண்டைதீவில் இலங்கைக் கடற்படை பாரிய படைவள மற்றும் தகவல் தொழிநுட்ப வசதிகளுடன் தரிப்பு முகாமொன்றை அமைத்தது.
இதனையடுத்து மண்டைதீவு கடற்படைத்தளத்தின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்திய கடற்படை, அதற்காக மண்டை தீவை அண்மித்த சிறுத்தீவை தமது ராடர் தகவல் பரிமாற்ற மையமாக மாற்றியது. இதன் பின்னர் சிறுத்தீவு யாழ் மேற்கு கடற்பிராந்தியத்தில் பாரிய தகவல் வழங்கல்களை கடற்படைக்கு செய்து வந்தது.
1999 -2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகள் வடமராட்சிக் கிழக்கு மாமுனை-குடாபரப்பு பகுதியில் தரையிறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இந்த தரையிறக்கம் ஆணையிறவு படைத்தளம் புலிகளால் இலகுவில் கைப்பற்றப்பட்டது. கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





யாழ்ப்பாணம் மண்டைதீவுக்கு அருகாமையில் கடற்படையினரின் முக்கிய தகவல் மற்றும் பாதுகாப்பு பரிமாற்ற மையமாக செயற்படும் சிறுத்தீவு கடற்படை முகாம் மீது கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ பிரிவினார் வியாழக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் மேற்கொண்ட ஈரூடக தாக்குதலானது பாதுகாப்பு தரப்பினரை திகிலடைய வைத்துள்ளது.



எதிர்வரும் டிசம்பர் 12 ம் திகதியிலிருந்து சுவிற்சர்லாந்து செங்கன் உடன்படிக்கையில் முழுமையாக இணைந்து கொள்ளும் என எதிர்பாரக்கப்படுவதாக புரூசெல்ஸ்ஸில் இன்று வெள்ளியன்று நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தின் தென்மாநில நகரமான பெலின்ஸோனா நகர நீதிமன்றம் போதைப்பொருளை சந்தைப்படுத்திய கொசொவோ நாட்டைச் சேர்ந்த 42 வயது நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
சுவிற்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளிலும் புதன் மாலையிலிருந்து ஆரம்பித்த பனிவீழ்ச்சி இரவு முழுவதும் தொடர்ந்ததால் வியாழன் காலை போக்குவரத்து பெரிதும் பாதிகபட்டடிருந்தது. தொடரூந்து சேவையிலும் தாமதங்கள் ஏற்பட்டன.
இலங்கைப் பிரச்னையில் உடனடியாகத் தீர்வு ஏற்பட போர் நிறுத்தம் ஒன்றே வழி என சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒரு சமூகத்தில் உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது அங்கு தீவிரவாதம் பிறந்தே தீரும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
35 வருடமாக தங்களது சுதந்திரத்துக்காக ஆயுதமேந்திவரும் தமிழ் மக்களின் போராட்டத்தை முப்படைகளும் கொண்டு சிங்கள அரசு முடக்க முடியாமல்போனது அவர்களின் ஆண்மையற்றதையே காட்டுவதாக பிரபல நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கராச்சி நகரில் 7 வயது சிறுவனுக்கும், 4 வயது சிறுமிக்கும் பால்ய விவாகம் நடக்க இருப்பதாக இருந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அதை தடுத்து நிறுத்தினார்கள்.
டில்லி டெஸ்ட் கிரிக்கட்டில் கவுதம் காம்பீருக்கும், ஷேன் வாட்சனுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர்கள், இந்தியக் கிரிக்கட் அணியின் வீரர்களை தூண்டி விடும் வகையில் செயல்பட்டதை சர்வதேசக் கிரிக்கட் சபை (ஐ.சி.சி) நடுவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் நேர்மை, விளையாட்டு உணர்வு குறித்து கேள்வி எழுப்பிய அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் அடம் கில்கிறிஸ்ட் இப்போது, இந்திய கிரிக்கட் அணியின் மற்றுமிரு நட்சத்திர வீரர்களான சவுரவ் கங்குலி, ஹர்பஜன்சிங் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன், அவர்களின் விளையாட்டு திறமை குறித்தும் விமர்சித்துள்ளார்.
அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர் ஷேன் வாட்சனை தனது தோள்பட்டையால் மோதி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய கிரிக்கட் அணியின் ஆரம்ப ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் வரும் 6ஆம் திகதி தொடங்கும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் காம்பீர் இடம்பெறமாட்டார்.
25,26.10.2008 ஆகிய இருநாட்களும் நடைபெற இருந்த சுவிசில் வாழும் மாணவர்களை ஊக்குவிக்கும் இசை கருவிகளுக்கான போட்டியான சுருதிலயம் நிகழ்வானது, தற்போதைய தாய்நாட்டின் நிலைமைகள் காரணமாக உறவுக்கு உயிர்கொடுப்போம் என்ற கவனஈர்பு நிகழ்வாக மாற்றப்பட்டு நேற்று (25.10.08) முன்னெடுக்கப்பட்டு, இன்றும் ( 26.10.08) நடைபெற்றது.
25,26.10.2008 ஆகிய இருநாட்களும் நடைபெற இருந்த சுவிசில் வாழும் மாணவர்களை ஊக்குவிக்கும் இசை கருவிகளுக்கான போட்டியான சுருதிலயம் நிகழ்வானது, தற்போதைய தாய்நாட்டின் நிலைமைகள் காரணமாக உறவுக்கு உயிர்கொடுப்போம் என்ற கவனஈர்பு நிகழ்வாக மாற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.
தமிழர் புனர்வாழ்வுக்கழக அனுசரனையுடன் ஐரொப்பிய நுண்கலை மையம் சுவிஸ்சில் இரண்டாவது தடவையாக நடாத்தும் ராகமாலிகா ஐப்பசி மாதம்18 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி 19 ம் திகதி மாலை 8 மணிக்கு நிறைவு பெற்றது. 

