20. August 2008 20:33
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
14. August 2008 16:37
2. August 2008 23:48
31. July 2008 18:12
27. July 2008 09:43
16. August 2008 15:10
சிறுத்தீவில் கலங்கிய கடற்படை: தீரம் குறையவில்லை என்ற கடற்புலிகள். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
தமிழீழத்தில் இருந்து த.பகலவன்.   
30. May 2008 15:00
ceruthivu.jpgயாழ்ப்பாணம் மண்டைதீவுக்கு அருகாமையில் கடற்படையினரின் முக்கிய தகவல் மற்றும் பாதுகாப்பு பரிமாற்ற மையமாக செயற்படும் சிறுத்தீவு கடற்படை முகாம் மீது கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ பிரிவினார் வியாழக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் மேற்கொண்ட ஈரூடக தாக்குதலானது பாதுகாப்பு தரப்பினரை திகிலடைய வைத்துள்ளது.

குறித்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி விட்டு கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் முக்கிய தகவல் பரிமாற்ற கருவிகளை மீட்டுக்கொண்டு வெற்றியுடன் தமது தளம் திரும்பியிருக்கின்றனர்.
 
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு விட்டன. இன்னும் சில காலத்தில் அவர்கள் முழுமையா அழிக்கப்பட்டு விடுவார்கள். என்று இலங்கைப் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கருணாகொட  அரசாங்க ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்து 24 மணித்தியாலங்களுக்குள் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் குறித்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன் மூலம் தமது தீரம் இன்னும் குறையவில்லை என்று விடுதலைப் புலிகள் மீண்டும் இலங்கை அரசாங்கத்துக்கும், சர்வதேசத்துக்கும் சொல்லியுள்ளனர்.
 
யாழ் நகரப்பகுதியின் தெற்கே 1.5 கிலோமீற்றர் தூரத்தில் மண்டைதீவு கடற்படை முகாமுக்கு அருகாமையில் சிறுத்தீவு கடற்படைமுகாம் அமைந்துள்ளது.

 

பூநகரி பகுதியில் இருந்து விரைந்து வந்த கடற்புலிகளின் சிறப்பு கொமோண்டோக்கள்  வியாழக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் சிறுத்தீவு படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தி சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரப்பகுதி தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்துள்ளனர்.

இதன்போது கடற்படையினரின் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படும் அதிநவீன கருவிகளையும், ஆயுதங்கiயும் கைப்பற்றியுள்ளதுடன், எடுத்துச் செல்ல முடியாதவற்றை முற்றாக அழித்துள்ளனர்.
 
கடற்புலிகளின் இந்த ஈரூடகத் தாக்குதலின் போது 13 படையினர்  கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். ஆனால் குறித்த தகவலை படைத்தரப்பு மறுத்துள்ளதுடன், கடற்புலிகளின்  3 படகுள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறான பொய்த் தகவல்களை படைத்தரப்பு வழமையாக வழங்கி வருகின்றது. இதனை சிங்கள ஊடகத்துறையே தற்போது கணக்கில் எடுப்பதில்லை. 
 
மண்டைதீவு, நெடுந்தீவு, புங்குடுதீவு உள்ளிட்ட யாழ் மாவட்டத்தின்  தீவுப்பகுதிகள் சிறந்த சுற்றுலாத்தலங்களாக விளங்கக் கூடியவை ஆனால், 1985 மற்றும் 1990 களில் குறித்த தீவுப்பகுதிகள் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அதன் பின்னர் இந்த தீவுப்பகுதிகள் முட்கம்பி மற்றும், கண்ணி வெடிகளினால் சிறைப்படுத்தப்பட்டது.
 
தற்போதைய பாதுகாப்பு செயலாளர் போத்தபாய ராஜபக்ஸ மற்றும்  தற்போதைய இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் இராணுவ கேணல்களாக 1990ஆம் ஆண்டு இருந்தபோது யாழ் கோட்டையை கைப்பற்றி தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ளும் நோக்குடன் பாரிய படைநகர்வொன்றை ஆரம்பித்திருந்தனர்.

குறித்த முன்னகர்வு நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளினால் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டது. முன்னகர்வு நடவடிக்கைகளில் தோல்வியடைந்த இராணுவத்தினர் பின்வாங்கிச் சென்று மண்டைதீவு மற்றும் அதனைச் சூழவுள்ள தீவுப்குதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
 
அதன் பின்னர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நோக்கில் இராணுவத்தினர் 1991 மற்றும் 1993 காலப்பகுதிகளில் முன்னகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தோல்வியுற்றனர்.

குறித்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவு துரித வளர்ச்சியடைந்து வந்தது. இதனையடுத்து மண்டைதீவில் இலங்கைக் கடற்படை பாரிய படைவள மற்றும் தகவல் தொழிநுட்ப வசதிகளுடன் தரிப்பு முகாமொன்றை அமைத்தது.
 
குறித்த காலப்பகுதியில் மண்டைதீவு கடற்படை முகாமிலிருந்த துரித வேகப்படகுகள் சிலவற்றை அழித்துவிட்டு ஒரு படகினை கடற்புலிகள்  கைப்பற்றிச் சென்றிருந்தனர்.

 

இதனையடுத்து மண்டைதீவு கடற்படைத்தளத்தின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்திய கடற்படை, அதற்காக மண்டை தீவை அண்மித்த சிறுத்தீவை தமது ராடர் தகவல் பரிமாற்ற மையமாக மாற்றியது. இதன் பின்னர் சிறுத்தீவு யாழ்  மேற்கு கடற்பிராந்தியத்தில் பாரிய தகவல் வழங்கல்களை கடற்படைக்கு செய்து வந்தது.
 
இந்த நிலையிலேயே கடற்புலிகளின் குறித்த தாக்குதலினால் இலங்கைக் கடற்படை நிலைகுலைந்து போயுள்ளதுடன், யாழ் கரையோரப்பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதி;ல் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளர்.

1999 -2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகள்  வடமராட்சிக் கிழக்கு மாமுனை-குடாபரப்பு பகுதியில் தரையிறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இந்த தரையிறக்கம் ஆணையிறவு படைத்தளம் புலிகளால் இலகுவில் கைப்பற்றப்பட்டது.
 
இந்த நிலையில் யாழ் நகரப்பகுதிக்கு அண்மித்த பகுதி வரை வந்து தாக்குதல் நடத்தி சென்றதன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசங்கப் படைகளினால் தொடர்ந்தும் தோற்கடிக்கப்பட்டு வருகிறார்கள். புலிகளின் எதிர்காலத்திட்டங்கள் அனைத்தும் படைத்தரப்பினரால் முறியடிக்கப்பட்டு வருகின்றது என்ற இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச பிரச்சாரத்தை மீண்டுமொரு தடவை விடுதலைப் புலிகள் தவிடுபொடியாக்கியுள்ளனர.

கருத்துக்கள் (0)

புதிய கருத்துக்களை எழுதவும்
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< முந்தைய   அடுத்த >