| மக்கள்கட்சியின் குடியுரிமைச்சட்டமூலம் மக்கள் வாக்கெடுப்பில் தோல்வி |
|
|
| ரி.என்.ஜே | |
| 1. June 2008 17:08 | |
இன்று சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற மக்கள் வாக்கடுப்பில் சுவிஸ் மக்கள் கட்சியினரால் முன்மொழியப்பட்ட மூன்று பிரேரணைகளும் நிராகரிக்கபட்டுள்ளன. முக்கியமாக வெளிநாட்டவர் சுவிஸ் குடியுரிமை பெறுவதனை மேலும் இறுக்கமாக்கும் பிரேரணையும் மக்களால் நிராகரிக்கபட்டுள்ளது. மொத்தம் 26 கன்ரோன்களில் கன்ரோன் "சுவைற்ஸ்", தவிர 25 கன்ரோன்களிலும் சட்டமூலம் தோல்வியைத் தழுவியுள்ளது.
சுவிற்சர்லாந்து முழுவதும் பிரேரணைக்கு எதிராக 14,15,189 வாக்குகளும், பிரேரணைக்கு ஆதரவாக 8.04.680 வாக்குகளும் கிடைத்துள்ளன. நாடுதழுவிய ரீதியில் 64 வீத மக்கள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இரண்டு மாதத்திற்கு முன்ப இப்பிரேரணைக்கு மக்களிடையே பலத்த ஆதரவு இருந்த்தை பத்திரிகைகளின் கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன. இருப்பினும் கடந்த இரு மாதங்களாக இதற்கு எதிரான கட்சிகள் இச்சட்டமூலத்தின் பாதக அம்சம்களை சிறப்பாக எடுத்துரைத்து பாரிய பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர். இதனை எதிர்த்து மக்கள் கட்சியும் ஏட்டிக்கு போட்டியாக பரப்புரைகளை முடுக்கி விட்டிருந்தது. மக்கள் கட்சியை சேர்ந்த நீதியமைச்சர் எவலின் விட்மர் சட்டமூலத்திற்கு எதிராக பரப்புரைகளை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுவிற்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டு மக்களை இப்பிரேரணையின் தோல்வி சற்றே ஆறுதலடைய வைத்துள்ளது. இத்தோல்வி தொடர்பாக மக்கள் கட்சி தலைவரிடம் கேட்கப்படபோது இன்று ஒரு கறுப்பு ஞாயிறு என்று மட்டும் தெரிவித்து மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|