|
சுவிஸ் மக்கள் கட்சியின் கிறவ்புன்ரன் மாநிலப்பிரிவு வெளியேற்றம் |
|
|
|
ரி.என்.ஜே
|
|
2. June 2008 21:58 |
கடந்த ஆறு மாதங்களாக கருத்து வேறுபாறுகளால் தமக்குள் பல முரண்பாடுகளை வளர்த்து வந்த நிலையில் சுவிஸ் மக்கள் கட்சியில் கிறவ்புன்ரன் மாநிலப்பிரிவு தாய்கட்சியிருந்து வெளியேறி புதிய கட்சியை அமைக்கபோவதாக அறிவித்துள்ளது. மக்கள் கட்சியின் மாநிலப்பிரிவின் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கபட்டபோது 81 வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் 5 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.
கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்தோவ் புளொஹ்ஹர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றபட்டு கிறவுபுன்ரன் மாநிலத்தை செர்ந்த திருமதி எவலின் விட்மர் தேர்ந்தெடுக்கபட்டபின்னர் சுவிஸ் மக்கள் கட்சியிலிருந்து எவலின் விட்மரை வெளியேற்றுவதற்கு கட்சி முயன்றவேளை கட்சியின் மாநிலப்பிரிவிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து முரண்பாடு உருவாகியது.
எவலினுக்கு ஆதரவான நிலை எடுத்த மாநிலப்பிரிவிற்கும் தாய்க்கட்சிக்குமிடையில் தொடர்ச்சியாக பல வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் மக்கள்கட்சியில் மாநிலப்பிரிவு இப்புதிய தீர்மானத்தை எடுத்துள்ளது.
|