20. August 2008 20:18
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
இணைய செய்திகள்
பதிவு புதினம் சங்கதி தமிழ்வின்info தமிழ்பிபிசி தமிழ் யாழ் இணையம்
முக்கிய ஆய்வு
3. August 2008 15:57
15. August 2008 17:36
30. July 2008 06:43
16. August 2008 15:10
3. August 2008 21:01
இலங்கை செய்திகள்
முக்கிய செய்தி
20. August 2008 18:11

வன்னி நோக்கி படை நகர்வினை மேற்கொண்டுவரும் முக்கிய படையணிகளில் ஒன்றான 57 டிவிசன் படையணியை தகர்க்க தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு படையணிகள்...

20. August 2008 13:35

போர் வெறியுடன் அலையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வடபகுதி மீதான போர் நடவடிக்கைகளுக்கு விரைவில் நல்லதோர் பாடத்தைக் கற்றுக்கொள்ளப்...

சுவிஸ் லவுசானில் அன்னைபூபதி ஞாபகார்த்த விளையாட்டுப் போட்டிகள் (2ம் இணைப்பு) அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
லவுசான் நிருபர்   
25. May 2008 17:47
Poopathy sports - Lausanneஇன்று காலை ஒன்பது மணிக்கு சுவிஸ் லவுசான் மாநிலத்தில் தியாக தீபம் அன்னைபூபதி அம்மாவின் பதின்மூன்றாவது ஆண்டு நினைவுசுமந்த விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பமாகின.

தியாகதீபம் அன்னைபூபதியினதும் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்குமான  பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் திரு.செ.குலம் அவர்கள் ஏற்றி வைத்தார்

அதனைத் தொடர்ந்து மாநிலப் பொறுப்பாளர் திரு.செல்வன் பூபதித்தாய்க்கு ஈகைச்சுடரினை ஏற்றி வைக்க விளையாட்டுதுறை பொறுப்பாளர் திரு.திருக்குமார் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தர்.

 

அகவணக்கத்தினை தொடர்ந்து மலர்வணக்கத்தினை திரு.செ.குலம் அவர்கள் ஆரம்பித்து வைக்க தொடர்ந்து கறுப்புபட்டி அணிந்தபடி குழுமியிருந்த மக்களும் விளையாட்டு வீரர்களும் அன்னைத்தாய்க்கும் வீரத்தின் நாயகனுக்கும் மலர்வணக்கம் செலுத்தினார்கள்.

திரு.அம்பலவாணர் அவர்களின் ஆரம்ப உரையினைத் தொடர்ந்து போட்டிகள் யாவும் ஆரம்பமாகின. காலை 9.30 மணிக்கு ஆரம்பமான போட்டிகள் மாலை 18.00 மணிக்கு நிறைவு பெற்றது. 

3ம் இடம்:- வானவில் வி.க லுட்சேர்ன்

2ம் இடம்:- தமிழ் இளநட்சத்திர வி.க லீஸ்

1ம் இடம்:- நீலநட்சத்திர வி.க லவுசான்

சிறந்த முன்னிலை விளையாட்டு வீரர் - வினோத் நீலநட்சத்திர வி.க லவுசான்

சிறந்த பின்னிலை விளையாட்டு வீரர்- யசிந்தன் தமிழ் இளநட்சத்திர வி.க லீஸ்

சிறந்த நடுநிலை விளையாட்டு வீரர் - சுஜீவன் நீலநட்சத்திர வி.க லவுசான்

சிறந்த பந்துகாப்பாளர்- நிஷாந் தமிழ் இளநட்சத்திர வி.க லீஸ்

சிறந்த ஆட்டநாயகன்:- சுதன் நீலநட்சத்திர வி.க லவுசான்

இன்றய சுற்றுப்போட்டியின் சிறந்த விளையாட்டுக் கழகம்:-  வானவில் வி.க லுட்சேர்ன்

 
< முந்தைய   அடுத்த >
2008ஆம் ஆண்டிற்கான தமிழீழ கிண்ணத்தை பிரித்தானியா சுவீகரித்தது
20. August 2008 08:27
வா.கி.குமார்
  சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழீழ கிண்ணத்திற்கான அனைத்துலக ரீதியான விளையாட்டுப் போட்டியில் தமிழீழ சுழல் கிண்ணத்தினை பிரித்தானியா பெற்றுள்ளது. விபரம்
2008 ல் இதுவரை 21 பாதசாரிகள் சுவிஸ் வீதிகளில் பலி
19. August 2008 12:52
ரி.என்.ஜே
unfall_statistik.jpgசுவிற்சர்லாந்தில் வீதிவிபத்துகளில் இவ்வாண்டு முதல் அரையாண்டில் 157 பேர் இறந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டின் இக்காலப்பகுதியை  விட நான்கு வீதம் குறைவானதாகும். அத்துடன் வீதி விபத்துகளில் 2145 பேர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளார்கள். இத்தொகை 2007 ம் ஆண்டின் முதல் அரையாண்டு விட 13 வீதம் குறைவானதாகும். விபரம்
வெளிநாடுகளில் வாழும் சுவிஸ் மக்களின் குழந்தைகளை ஜனாதிபதி சந்தித்தார்
19. August 2008 10:21
ரி.என்.ஜே

kinderschar_bei_pascal_couchepin_na_normal.jpgசுவிற்சர்லாந்தின் ஜனாதிபதி பாஸ்கால் குஷ்பின் வெளிநாட்டில் வாழும் சுவிஸ் பிரஜைகளின் 42 குழந்தைகளை பாராளுமன்ற மேற்சபை மண்டபத்தில் சந்தித்தார். எட்டு வயதிலிருந்து பதினான்கு வயதாக பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர்.

விபரம்
மக்கள் பிரச்சினைக்காக போராட காங்கிரஸ் தயங்காது - கே.வி.தங்கபாலு
20. August 2008 06:32
வா.கி.குமார்

thanbalu.jpgமக்கள் பிரச்சினைக்காக போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி தயங்காது என்று கே.வி.தங்கபாலு பேசினார்.

விபரம்
கருணாநிதிக்கு கவுரவ டாக்டர் பட்டம்
20. August 2008 06:20
வா.கி.குமார்

karunanidhi.jpgசென்னை பல்கலைக்கழக 150-வது ஆண்டு விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி நடக்கிறது. விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை கவர்னர் பர்னாலா வழங்குகிறார்.

விபரம்
தலித், முஸ்லிம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது -திருமாவளவன்
20. August 2008 06:13
வா.கி.குமார்
tholtirumavalavan.jpgகல்பாக்கத்தில் நடந்த பிரச்சினையை சிலர் பெரிதாக்க பார்க்கிறார்கள் என்றும், எந்த சக்தியாலும், தலித், முஸ்லிம் ஒற்றுமையை பிரிக்க முடியாது என்றும் திருமாவளவன் கூறினார். விபரம்
முஷாரபின் பதவி விலகலை ஒபாமாவும், மெக்கெய்னும் வரவேற்றுள்ளனர்
20. August 2008 08:09
வா.கி.குமார்

obama.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப், தனது பதவியிலிருந்து விலகியதை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களான பராக் ஒபாமாவும், ஜோன் மெக்கெய்னும் வரவேற்றுள்ளனர்.

விபரம்
ஈராக்கிய கவர்னரை கொல்ல ராணுவ வீரர்கள் முயற்சி செயலாளர் பலி
20. August 2008 06:07
வா.கி.குமார்

irag.jpgஈராக் நாட்டில் உள்ள தியாலா மாநிலத்தின் கவர்னராக இருப்பவர் ராத் ரஷீத் முல்லா ஜாவேத். தலைநகர் பக்பாவில் உள்ள கவர்னர் அலுவலகத்துக்கு நள்ளிரவு 2.30 மணிக்கு ராணுவ வீரர்கள் சிலர் சென்று தாக்குதல் நடத்தினர்.

விபரம்
முஷரப் மெக்காவுக்கு புனித யாத்திரை செல்கிறார் அமெரிக்காவில் சில மாதங்கள் தங்குகிறார்
20. August 2008 05:50
வா.கி.குமார்

musharraf_Tamb.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய முஷரப் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனித பயணம் செய்கிறார்.

விபரம்
இலங்கை-இந்திய ஒருநாள் கிரிக்கட் தொடர்: 2வது போட்டியில் போராடி வென்றது இந்தியா.
20. August 2008 14:18
PTR.
in_sl_2.jpgஇலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியக் கிரிக்கட் அணி, தம்புள்ளவில் இன்று இடம்பெற்ற 2வது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் 3 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது. இதனையடுத்து, 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா, 1:1 என்ற கணக்கில் சமப்படுத்தியுள்ளது. விபரம்
பீஜிங் ஒலிம்பிக் 2008: 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வெல்வரா உசைன் போல்ட்?
20. August 2008 07:41
PTR.
usain_bolt_new_record.jpgபீஜிங் ஒலிம்பிக்கில், 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற ஜமேக்காவின் உசைன் போல்ட், உலகின் மின்னல் வேக வீரராக ஜொலிக்கின்றார். அடுத்து, இன்று நடைபெறவுள்ள 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டியிலும் அவர் முதலிடம் பெற்று தங்கத்தை பெறுவார் என்று உலக விளையாட்டு ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். விபரம்
டேவிஸ் கிண்ண டென்னிஸ்: தலைவர் பதவியிலிருந்து விலகினார் லியாண்டர் பயஸ்.
20. August 2008 07:30
PTR.
paes_w_26.jpgடேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைவர் பதவியிலிருந்து லியாண்டர் பயஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். அகில இந்திய டென்னிஸ் சங்கம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்திய அணியின் தலைவராக முன்னாள் டேவிஸ் கிண்ண வீரர் எஸ்.பி.மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். விபரம்
எம்மவர் நிகழ்வு
சுவிஸ்சில் நடைபெற்ற 25வது ஆண்டு கறுப்புயூலை நினைவு கூரும் நிகழ்வு
25.JPGசிங்கள அரசின் இனவெறித்தனத்தால் தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட 1983 ஆம் ஆண்டு கறுப்புயூலையின் 25 ஆம் வருடத்தினை நினைவு கூரும் நிகழ்வு சுவிஸ் மகளிர்; அமைப்பின் ஏற்பாட்டில் 13.07.08 அன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில் நடைபெற்றது.  (படத்தொகுப்பு)
விபரம்
 
பிரித்தானியாவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வின் படத்தொகுப்பு
pongu_tamil_-23.jpgபிரித்தானியாவில்‘எங்களுக்கு தமிழீழம் வேண்டும்’என்ற இளையோரின் மேடை முழக்கத்துடன் 40000க்கும் மேற்பட்ட தமிழீழ உணர்வாளர்களின் உணர்வுடன் பொங்கியெழுந்தது பொங்கு தமிழ் நிகழ்வின் படத்தொகுப்பு
 
சுவிசில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற "கரும்புலிகள் நாள்"
4black tiigers day swiss.jpgதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 05.07.1987 அன்று புதிய சகாப்தத்தை எழுதிக் கரும்புலி வரலாற்றை ஆரம்பித்து வைத்த கரும்புலி கப்டன் மில்லர் தன்னுடலையே குண்டாக்கி எதிரியை அழித்து 21 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. மில்லர் தொடக்கி வைத்த கரும்புலி சகாப்தத்தில் சங்கமித்த கரும்புலி வீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவிற்கொள்ளும் கரும்புலிகள் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் 06.07.08 ஞாயிற்றுக்கிழமை அன்று சர்க்கான்ஸ் பிரதேசத்தில் நடைபெற்றது. (படத்தொகுப்பு)
விபரம்
 
மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற சுவிஸ் பொங்கு தமிழ் நிகழ்வின் படத்தொகுப்பு
1Poongutami.jpgஈழத்தமிழ் மக்களால் உலகின் முக்கிய நகரங்களெங்கும் கொண்டாடப்பட்டுவரும் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு இன்று 05.07.2008  சுவிற்சர்லாந்தின் தலைநகரான பேர்ன் நகரின் வங்க்டொர்வ் மைதானத்தில் 15.00 மணிக்கு பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றது. (மேலதிக படங்கள் இணைப்பு)